பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளுக்கு, சிறந்த சினிமா கலைஞர்களுக்கு மகுடம் சூடி கொண்டாடும் மகுடம் விருதுகள் 2022 இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் விளையாட்டு பிரிவில் விருதைப் பெற்றார் சத்தியன் ஞானசேகரன்
இந்திய டேபிள் டென்னிஸின் இளம் அடையாளம் சென்னையைச் சேர்ந்த சத்தியன் ஞானசேகரன். உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் முதல் 25 இடத்திற்குள் நுழைந்து சாதனை படைத்த முதல் இந்தியரும் இவரே.
சரத் கமல் அதிரடி ஆட்டக்காரர் என்றால் நிதானமாக எதிராளியை எதிர்கொள்வது இவரது ஸ்பெஷல். ஜப்பானின் டி – லீக் (T – League) கில் பங்கேற்கும் ’Okayama Rivets’ கிளப் அணிக்கு தேர்வான முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் என்ற பெருமையும் இவர் வசமானது.
உலகின் 5-ம் நிலை வீரரான ஜப்பானின் Harimoto Tomokazu வை வீழ்த்திய தருணத்தில் உலகை திரும்பி பார்க்க செய்தார் சத்தியன் ஞானசேகரன்.
தான் கலந்துகொண்ட முதல் சர்வதேச போட்டியிலேயே தங்கப்பதக்கம் வென்று மிரள வைத்த இவருக்கு தாய்லாந்து , ஸ்வீடன், பல்கேரியா, கத்தார் என சென்ற இடமெல்லாம் வெற்றி மேல் வெற்றியே.
2018 ஆம் ஆண்டு அர்ஜூனா விருதினை முத்தமிட்டு தற்போது ஒலிம்பிக் கனவில் காத்திருக்கும் தமிழ் மண்ணின் மைந்தன் சத்தியன் ஞானசேகரன் அவர்களுக்கு மகுடம் விருதுகள் -2022 இல் ஸ்போர்ட்ஸ் விருதினை வழங்குவதில் உவகை கொள்கிறது நியூஸ்18 தமிழ்நாடு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Magudam Awards