முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மகுடம் விருதுகள் 2022 : சிறந்த சமூகப் பொறுப்புள்ள நிறுவனம் - கஜானந்தா ட்ரஸ்ட்!

மகுடம் விருதுகள் 2022 : சிறந்த சமூகப் பொறுப்புள்ள நிறுவனம் - கஜானந்தா ட்ரஸ்ட்!

சமூக பொறுப்புள்ள நிறுவனம்

சமூக பொறுப்புள்ள நிறுவனம்

Magudam awards 2022 : சிறந்த சமூகப் பொறுப்புள்ள நிறுவனம் விருதைப் பெறும் கஜானந்தா ட்ரஸ்ட்

  • Last Updated :
  • Chennai, India

பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளுக்கு, சிறந்த சினிமா கலைஞர்களுக்கு மகுடம் சூடி கொண்டாடும் மகுடம் விருதுகள் 2022 இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.இதில் Outstanding Corporate Social Responsibility விருதினை Gajaananda Trust பெறுகிறது

சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகையின் நிர்வாக இயக்குனரான அருள்நிதி. ஸ்ரீ பி.கே. ஆறுமுகம் அவர்களால் 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது கஜானந்தா ட்ரஸ்ட்.’கர்ப்பதாரினி’ என்ற பெயரில் கர்ப்பத்திற்கு முந்தைய ம்ற்றும் கர்ப்பம் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள்...... இலவச திருமண சேவை மற்றும் திருமணத்திற்கு முந்தைய படிப்புகளால் ’சீதனம்’ என்ற பெயரில் அறிவியல், ஆன்மீகம் சார்ந்து சாதி மத பாகுபாடு இல்லாமல் இங்கு பயனடைந்தோர் பலர்.

’FIT FOR FUTURE’ என்ற பெயரில் இந்த ட்ரஸ்ட் நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான வெற்றிக்கான வழி சேரும் வகுப்புக்களால் மட்டும் பயனடைந்தோர் 18,000 க்கும் மேற்பட்டோர்.’வளம்’ என்ற பெயரில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிக்க மனநல ஆலோசனைகள் ’உழவர் சேவை மையம்’ என்ற பெயரில் அரசின் மானியத் திட்டங்கள், மற்றும் விவசாயக் களப் பயிற்சிகள் விவசாயிகளை சென்றடைய திட்டங்கள் இந்த ட்ரஸ்டின் தனிப்பெரும் சிறப்புகள்.

’உழவாரப்பணி’ என்ற பெயரில் தெருக்களை சுத்தமாக வைத்திருக்க ஒவ்வொரு மாதமும் துப்புரவு பணிகள் மேற்கொள்வதும்.....இல்லம் தோறும் மனவளக்கலையும் இதன் சாதனை துளிகள்.

இதுபோன்ற பல்வேறு சமுக நலப்பணிகளை வழங்கிவரும் கஜானந்தா அறக்கட்டளை துவங்கப்பட்ட கடந்த ஆறு வருடங்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் 1,50,000 நபர்களுக்கு சேவைகள் வழங்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

top videos

    மகுடம் விருதுகள் -2022 இல் Outstanding Corporate Social Responsibility விருதினை Gajaananda Trust நிறுவனத்திற்கு வழங்குவதில் பெருமை கொள்கிறது நியூஸ்18 தமிழ்நாடு.

    First published:

    Tags: Magudam Awards