மகுடம் விருதுகள் 2022 LIVE: விஜய் பிறந்தநாளில் லியோ... தயாரிப்பாளர் சொன்ன அப்டேட்..!

Magudam awards 2022 : 2022 ஆம் ஆண்டுக்கான மகுடம் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விருது பெறும் சாதனையாளர்கள் யார் யார்? உடனுக்குடன் தகவல்கள்..!

பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்துவரும் தமிழ் நாட்டைச் சார்ந்த கலைஞர்களை, சாதனையாளர்களை மகுடம் விருதுகள் மூலம் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி கவுரவித்து வருகிறது.

மேலும் படிக்க ...
30 Mar 2023 20:22 (IST)

சிறந்த ஓடிடி திரைப்படத்திற்கான விருது - மகான்

சிறந்த OTT Premiere பிரிவின் கீழ்  ‘மகான்’ படத்திற்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை seven screen தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் லலித் குமார் மற்றும் குழுவினர் பெற்றுக் கொண்டனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது ‘மகான்’. ஒழுக்க சீலனாக வாழும் ஒரு சாதாரண மனிதன் எப்படி வாழ்க்கையில் அதற்கு நேரெதிர் திசைக்கு செல்கிறான் என்பதை பரபரப்பும் பாசமும் கலந்து சொன்னது இப்படத்தின் கதை. மகுடம் விருதுகள் -2022 இல் BEST OTT PREMIERE விருதினை ’மஹான்’ திரைப்படத்திற்கு வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறது நியூஸ்18 தமிழ்நாடு.

30 Mar 2023 19:58 (IST)

லியோ அப்டேட் சொன்ன தயாரிப்பாளர்

விஜய் நடிக்கும் லியோ படத்திற்கான அப்டேட் நடிகர் விஜய் பிறந்தநாளான ஜூன் மாதம் 22ஆம் தேதி வெளியாகும்  என படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்துள்ளார். மகுடம் விருதுகள் வழங்கும் விழாவில் இதனை அறிவித்தார்.

30 Mar 2023 19:50 (IST)

விளையாட்டுப் பிரிவு விருது

விளையாட்டுப் பிரிவின் விருதை டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் பெற்றார். இந்த விருதை சபாநாயகர் அப்பாவு வழங்கினார். சபாநாயகருடன் இணைந்து முன்னாள் அமைச்சர்கள் வைகை செல்வன் , விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் வழங்கினர்.

இந்திய டேபிள் டென்னிஸின் இளம் அடையாளம் சென்னையைச் சேர்ந்த சத்தியன் ஞானசேகரன். உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் முதல் 25 இடத்திற்குள் நுழைந்து சாதனை படைத்த முதல் இந்தியரும் இவரே. 2018 ஆம் ஆண்டு அர்ஜூனா விருதினை முத்தமிட்டு தற்போது ஒலிம்பிக் கனவில் காத்திருக்கும் தமிழ் மண்ணின் மைந்தன் சத்தியன் ஞானசேகரன் அவர்களுக்கு மகுடம் விருதுகள் -2022 இல் ஸ்போர்ட்ஸ் விருதினை வழங்குவதில் உவகை கொள்கிறது நியூஸ்18 தமிழ்நாடு

30 Mar 2023 19:45 (IST)

சிறந்த திரைப்படத்துக்கான விருது - டாணாக்காரன்

சிறந்த திரைப்படத்துக்கான விருது டாணாக்காரன் படத்திற்கு வழங்கப்பட்டது. தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் தமிழ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு விருது வழங்கப்பட்டது. விருதை சபாநாயகர் அப்பாவு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமு, காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வபெருந்தகை வழங்கினர்.

30 Mar 2023 19:42 (IST)

ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

விருதுகள் விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “இங்கு விருது பெற்றவர்கள் அனைவரும் சாதிப்பதற்கான ஊக்கமளிப்பவர்கள். உங்கள் உழைப்பால் சாதித்தவர்கள். உங்கள் கதைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட வேண்டியவை. சினிமா தமிழ்நாட்டில் சமூக மாற்றம், அரசியல் மாற்றத்துக்கு காரணமாக இருந்துள்ளது. இளைஞர்கள் கடுமையாக உழைத்து முன்னேற கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். உங்கள் கதைகள் அவர்களுக்கு சென்றடைய வேண்டும். இந்த கதைகளை வெளிக்கொண்டு வந்ததற்காக நியூஸ்18க்கு நன்றி” என்று தெரிவித்தார்.

30 Mar 2023 19:18 (IST)

கமல்ஹாசனுக்கு இந்திய சினிமாவின் பெருமை விருது

‘இந்திய சினிமாவின் பெருமை’ என்ற விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை ஆளுநர் ஆர்.என். ரவி வழங்கினார். இயக்குநர்கள் பாரதிராஜா, லோகேஷ் கனகராஜ், வசந்த், நடிகர் கார்த்தி, குஷ்பு ஆகியோர் உடன் இருந்தனர். மேடையில் பேசிய பாரதிராஜா, “தமிழ் திரை உலகில் நான் மிகவும் பெருமைப்படுவது கமல்ஹாசனை நினைத்துதான். இன்றளவும் நிஜமான உலக நாயகன் கமல்” என்று பாராட்டினார்.

30 Mar 2023 19:12 (IST)

சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது

சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது செல்வ முரளிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை ஆளுநர் ஆர்.என்.ரவி, பொன்வண்டு சோப் மேடிக் லிக்யுட்-ன் மூத்த பிரதிநிதி பி.சிவா ஆனந்த் வழங்கினர். மேடையில் பேசிய செல்வ முரளி, “நான் மென்பொருள் துறையில் சம்பாதிப்பதை விவசாயத்துக்கு செலவிடுகிறேன். நியூஸ்18 என்னை அங்கீகரித்தற்கு நன்றி” என்று தெரிவித்தார்.

 

இவர் உருவாக்கிய ‘விவசாயம்’ என்ற வேளாண் துறை சார்ந்த செயலி கூகுளின் சி.இ.ஓ சுந்தர் பிச்சையையே வியப்பில் ஆழ்த்தியது. டெல்லிக்கு அழைக்கப்பட்ட இவர் சுந்தர் பிச்சையை சந்தித்து பாராட்டுக்களையும் பெற்றார். விவசாயம் சார்ந்த தொழில் நுட்பங்கள் ஒவ்வொரு விவசாயியையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடு உழைக்கும் செல்வ முரளி அவர்களுக்கு மகுடம் விருதுகள் -2022 இல் INNOVATION விருதினை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறது நியூஸ்18 தமிழ்நாடு.

30 Mar 2023 19:04 (IST)

'தெருக்குரல்' அறிவுக்கு கலை, கலாச்சார விருது

கலை மற்றும் கலாச்சார விருது பாடகர் ‘தெருக்குரல்’ அறிவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை ஆளுநர் ஆர்.என்.ரவி, நியூஸ் 18 executive vice president ராஜேஷ் வழங்கினர்.  “மக்கள் பிரச்னைகள் குறித்து தன்னலம் இல்லாமல் பாடியவர்களை பார்த்துதான் நான் இசையை கற்றுக் கொண்டேன். அவர்கள் அனைவருக்கும் என் நன்றி” என அறிவு மேடையில் பேச்சு.

 

அதிகாரத்திற்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் வலி குறித்தான இவரது பல பாடல்கள் கவனம் பெற்றது. ரஜினிகாந்த் – பா.ரஞ்சித் கூட்டணியில் வெளியான ‘காலா’ படத்தில் ‘உரிமையை மீட்போம்’ பாடலை எழுதியதன் மூலம் தமிழ் சினிமாவிலும் இவரது குரல் ஒலிக்க தொடங்கியது. ’வட சென்னை’ , ‘ஜிப்சி’ , ’சூரரைப் போற்று’. ‘மாஸ்டர்’ திரைப்படங்களில் பாடல்களை எழுதியும் பாடியும் வெள்ளித் திரையையும் தெறிக்கவிட்டவர் ‘தெருக்குரல்’ அறிவு. மகுடம் விருதுகள் -2022 இல் ARTS & CULTURE விருதினை ‘தெருக்குரல்’ அறிவு அவர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறது நியூஸ்18 தமிழ்நாடு.

30 Mar 2023 18:59 (IST)

வணிக முன்னோடி விருது

வணிக முன்னோடி விருது (Business leader award) மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.சதீஷ் குமார்-க்கு வழங்கப்பட்டது. அவர் சார்பாக  உதவி பொது மேலாளர் விடுதலை பெற்றுக் கொண்டார். இந்த விருதை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

பால் பண்ணையில் ஆரம்பித்து பன்னீர் தயாரிப்பில் பயணித்து இன்று தயிர் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் இவரின் உழைப்பு ‘அடடா’ என வியக்கும் ஒரு ஆச்சரியம். 2007-08-இல் இவரின் டேர்ன் ஓவர் ரூ.13.78 கோடி…. அதுவே. 2015-16-இல் அது ரூ.290 கோடி. காரணம். தயிர் விற்பனையில் தன்னிகரில்லா சாதனை புரிந்த Milky Mist Diary foods pvt Ltd நிர்வாக இயக்குனர் டி. சதீஷ் குமார் அவர்களுக்கு மகுடம் விருதுகள் -2022 இல் Business leader Award விருதினை வழங்குவதில் பெருமை கொள்கிறது நியூஸ்18 தமிழ்நாடு.

 

 

30 Mar 2023 18:53 (IST)

லோகேஷ் கனகராஜுக்கு சிறந்த இயக்குநர் விருது

சிறந்த இயக்குநருக்கான விருது லோகேஷ் கனகராஜ்-க்கு வழங்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த விருதை வழங்கினார். உடன் நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் வசந்த், சீனு ராமசாமி மேடையில் இருந்தனர். கமல்ஹாசனை கர்ஜிக்க வைத்த இவரது ‘விக்ரம்’ வின்ணைத் தாண்டியும் வசூல் மழை பொழிந்து வரலாறானது. தன் படைப்புக்களை ஒன்றோடு ஒன்று இணைத்து கதைகள் சொல்லும் வித்தையால் தானா சேர்ந்த கூட்டத்தை உருவாக்கியது இவரின் ’லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்’
இவரின் கால் சீட்டுக்கு சல்மான் கான்களும் ஷாருக் கான்களும் காத்திருக்க ‘லியோ’ வின் மாஸ் விருந்துக்கு காத்திருக்கிறது இவரது யுனிவர்ஸின் பெரும் படை.

30 Mar 2023 18:46 (IST)

ஊக்கமளிக்கும் பெண்மணிக்கான விருது

ஊக்கமளிக்கும் பெண்மணிக்கான விருது ( inspirational woman) ‘அம்மா சமையல்’ மீனாட்சிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ வழங்கினர். தனது சமையல் திறன்களை யூ டியூப் மூலம் வெளி உலகுக்கு எடுத்துக் காட்டியவர். பல்வேறு நாடுகளில் இவரது சமையல் மணம் பரவியுள்ளது. சாதிக்க கல்வி, பொருளாதாரம் தடை அல்ல என நிரூபித்தவர். இந்த விருதை பெற்றதற்கு தனது இரு மகன்களே காரணம் என்று மேடையில் பெருமிதம் கொண்டார் மீனாட்சி.

30 Mar 2023 18:43 (IST)

Outstanding corporate social responsibility விருது

Outstanding corporate social responsibility விருதை கஜானந்தா ட்ரஸ்ட் நிர்வாக இயக்குநர் பி.கே.ஆறுமுகத்துக்கு வழங்கப்பட்டது. விருதை லூகாஸ் இந்தியன் சர்வீஸ் லிமிடெட் தலைவர் ராகவன் , நடிகை நமிதா வழங்கினர்.

பல்வேறு சமுக நலப் பணிகளை வழங்கி வரும் கஜானந்தா அறக்கட்டளை துவங்கப்பட்ட கடந்த ஆறு வருடங்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் 1,50,000 நபர்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த விருதை ஆறுமுகம் சார்பாக கஜானந்தா டிரஸ்ட் சேர்ந்த வினித் குமார் பெற்றுக் கொண்டார்.

30 Mar 2023 18:36 (IST)

YOUTH ICON விருது - பிரக்ஞானந்தா

மகுடம் விருதுகள் – 2022 விழாவில் YOUTH ICON விருது சதுரங்க கில்லாடி, உலகின் முதல் நிலை வீரரை வீழ்த்திய முதல் இந்தியர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு வழங்கப்பட்டது. விருதை இந்திய குத்துச்சண்டை வீரர் தேவராஜன், இந்திய பெண்கள் கூடைப்பந்து அணியின் தலைவர் பத்மஸ்ரீ அனிதா பால்துரை வழங்கினர். நற்சான்றிதழை ஆளுநர் வழங்கினார்.

சதுரங்க ஆட்டத்தில் கட்டம் கட்டி ஆடும் பிரக்ஞானந்தாவிற்கு மகுடம் விருதுகள் -2022 இல் YOUTH ICON விருதினை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறது நியூஸ்18 தமிழ்நாடு. 

30 Mar 2023 18:31 (IST)

இலக்கிய விருது

இலக்கியத்துக்கான விருது ராஜேந்திரன் ஐ.ஏ.எஸுக்கு வழங்கப்பட்டது. விருதை ஆளுநர் ஆர்.என்.ரவி, பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி ஆகியோர் வழங்கினர்.

இந்தியாவின் முதல் சுதந்திர எழுச்சி தமிழ்நாட்டிலிருந்துதான் துவங்கியது என்பதை மிக ஆதாரபூர்வமாக நிறுவியது இவரது படைப்பு ‘காலா பாணி’. இவர்தான் 2022ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதை வென்ற எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

30 Mar 2023 18:25 (IST)

வாழ்நாள் சாதனையாளர் விருது

மகுடம் வாழ்நாள் சாதனையாளர் விருது பாலம் கல்யாணசுந்தரத்துக்கு வழங்கப்பட்டது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் மியாட் குழும – விளம்பரப் பிரிவு துணைத் தலைவர் அருண் குமார் செங்கதிர் செல்வன் ஆகியோர் வழங்கினர்.

30 Mar 2023 18:13 (IST)

மகுடம் விருதுகள் - 2022 விழா தொடங்கியது.

மகுடம்  விருதுகள் 2022 விழா சென்னையில் தொடங்கியது.  விழாவினை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். உடன் நியூஸ்18 தென்னிந்திய பிரிவு ஆசிரியர் விவேக் நாராயணன், குஷ்பு, சௌம்யா அன்புமணி, ஜி.கே.வாசன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.

30 Mar 2023 18:01 (IST)

மகுடம் விழாவில் சீனு ராமசாமி

மகுடம் விருதுகள் விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி..

 

30 Mar 2023 14:29 (IST)

Best Moment of Magudam Awards 2017

Best Moment of Magudam Awards 2017 | கிராமப்புற பள்ளி மாணவர்களின் மேற்படிப்பிற்கு ஒளி ஏற்றிய முதல் தலைமுறை பட்டதாரிகள்

30 Mar 2023 12:21 (IST)

மகுடம் விருதுகள் 2019: Best Moment

Best Moment of Magdudam Awards 2019 | நல்ல கதையில்லாமல் மம்முட்டியை நான் என்னுடன் நடிக்க அழைக்கமாட்டேன் – கமல்ஹாசன்

 

30 Mar 2023 11:46 (IST)

தமிழ்நாட்டின் முகங்கள்

தமிழ்நாட்டின் முகங்களாக உருவெடுத்திருக்கும் சாதனையாளர்களுக்கு மகுடம் சூடும் இந்த மகத்தான விழாவில், அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசு உயரதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

കൂടുതൽ വായിക്കുക

அந்த வகையில், 2022 ஆம் ஆண்டுக்கான விருதுகள் இன்று மாலை சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது. பல்வேறு துறைகளில் சாதித்த மகத்தான ஆளுமைகள் இந்த விழாவில் கவுரவிக்கப்பட உள்ளனர்.

தமிழ்நாட்டின் முகங்களாக உருவெடுத்திருக்கும் சாதனையாளர்களுக்கு மகுடம் சூடும் இந்த மகத்தான விழாவில், அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசு உயரதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விருது பெறும் ஆளுமைகள் குறித்த விவரங்கள் அறிய, நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி மற்றும் இணையதளம், சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்.