பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளுக்கு, சிறந்த சினிமா கலைஞர்களுக்கு மகுடம் சூடி கொண்டாடும் மகுடம் விருதுகள் 2022 இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் LIFE TIME ACHIEVEMENT விருது பாலம் கல்யாணசுந்தரத்துக்கு வழங்கப்பட்டது
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை” - என்ற தமிழ் மறை தந்த வள்ளுவன் கூற்றுக்கு யாவரும் கை காட்டும் ஒருவர்தான் பாலம் கல்யாணசுந்தரம்.
‘இந்தியாவின் சிறந்த நூலகர்’ விருது பெற்ற கல்யாணசுந்தரம் திருநெல்வேலி மாவட்டம் மேலக்கருவேலங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். 30 ஆண்டுகள் கல்லூரியில் நூலகராகப் பணியாற்றிய இவர், அதில் கிடைத்த வருமானம், ஓய்வூதியம், குடும்பச் சொத்து, விருதுகள் மூலம் கிடைத்த பரிசுத் தொகைகள் உள்ளிட்ட அனைத்தையுமே தொண்டுப் பணிக்கு வழங்கியவர். ‘பாலம்’ என்ற தொண்டு நிறுவனம் மூலம் சமூக சேவை ஆற்றி வரும் இவரது பயணம் மலைக்கத்தக்கது.
எளியோருக்கு உதவும் இவரது சமூக சேவையை பாராட்டி ’கடந்த ஆயிரம் ஆண்டுகளில் உலகம் இப்படியொரு மனிதரை கண்டிருக்காது’` என 1999ஆம் ஆண்டு அமெரிக்கா இவருக்கு ‘Man of the Millennium Award‘ என்னும் விருது அளித்து சிறப்பித்தது.
இவ்விருதில் ரூ.30 கோடியைப் பரிசாகப் பெற்ற இவர் அந்தத் தொகை முழுவதையுமே குழந்தைகள் நலனுக்காக அளித்து, அந்த விருதையே வியப்படையச் செய்தார். பெரும்பங்களா பரிசாக வந்தபோது மறுத்தவர், சூப்பர்ஸ்டார் ரஜினி தன் தந்தையாக தத்தெடுத்தபோதும் , அதனை விடுத்து தன் சொந்த வீட்டுக்குச் சென்றவர்.
மகத்தான மக்கள் பணிகளை எளிய மனிதராக செய்துவரும் இவரை, 20ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளர்களில் ஒருவராக ஐக்கிய நாடுகள் அமைப்பு தேர்ந்தெடுத்ததும் சாதனையானது.
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதினை தற்போது பெற்றுள்ளார் பாலம் கல்யாணசுந்தரம். சாதனையாளராக இருந்தாலும் சாமானியராக இருந்து வரும் பாலம் கல்யாண சுந்தரம் அவர்களுக்கு மகுடம் விருதுகள் -2022 இல் LIFE TIME ACHIEVEMENT விருதினை வழங்குவதில் பெருமை கொள்கிறது நியூஸ்18 தமிழ்நாடு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Magudam Awards, Tamil Nadu