பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளுக்கு, சிறந்த சினிமா கலைஞர்களுக்கு மகுடம் சூடி கொண்டாடும் மகுடம் விருதுகள் 2022 இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த விருது பரிந்துரையில் 2022ல் சிறந்த INSPIRATIONAL WOMAN விருதை வென்றார் ‘அம்மா சமையல்’ மீனாட்சி.
யு டியூப் பார்த்து சமையல் கற்றுக்கொள்ளும் இளைய தலைமுறையினருக்கு இவரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை.
அவர்தான் அடி மட்டத்தில் இருந்து மேலேறி வந்து சமையலால் சப்ஸ்க்ரைபர்களை அள்ளிய சாதனைப் பெண் ’அம்மா சமையல்’ மீனாட்சி. சமையல் கலையில் சாதித்துக் கொண்டிருக்கும் இவர் கடந்து வந்த கண்ணீர் கதைகள் ஏராளம்.
தான் தவறவிட்ட மூத்த மகனின் கனவை நிறைவேற்ற இளைய மகனின் தோள் பற்றி எழுந்த ஃபீனிக்ஸ் தாய். ஊறுகாய் விற்பனை…. சிறிய அளவில் உணவகம் என ஆரம்ப நாட்களில் பயணித்த இவர்தான் தற்போது வெளி நாடுகளுக்கும் சமையல் மசாலாவை விற்பனை செய்யும் சமையல் கில்லாடி. மசாலா பொடிகளில் 48 வகைகள்…. 8 வகை ஊறுகாய் என இவரின் கை மணம் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, துபாய் தாண்டியும் கம கம….
சாதிக்க துடிப்பர்களுக்கு கல்வி அறிவோ.. வயதோ..பின்புலமோ தேவையில்லை என்பதை தன் உழைப்பின் மூலம் சொல்லி சமையல் கலையில் வெற்றியை தொட்ட ’அம்மா சமையல்’ மீனாட்சி அவர்களுக்கு மகுடம் விருதுகள் -2022 இல் INSPIRATIONAL WOMAN விருதினை வழங்குவதில் பெருமை கொள்கிறது நியூஸ்18 தமிழ்நாடு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Magudam Awards