முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மகுடம் விருதுகள் 2022 : YOUTH ICON விருதினை பெற்றார் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

மகுடம் விருதுகள் 2022 : YOUTH ICON விருதினை பெற்றார் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

யூத் ஐகான் விருது பெற்ற கிராண்ட் மாஸ்டர்

யூத் ஐகான் விருது பெற்ற கிராண்ட் மாஸ்டர்

Magudam awards 2022 : நியூஸ் 18 தமிழ்நாடு நடத்தும் மகுடம் விருதுகள் 2022 சென்னையில் நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளுக்கு, சிறந்த சினிமா கலைஞர்களுக்கு மகுடம் சூடி கொண்டாடும் விதமாக நியூஸ் 18 தமிழ்நாடு நடத்தும் மகுடம் விருதுகள் 2022 இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் YOUTH ICON விருதினை கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பெற்றார்.

சதுரங்க ஆட்டத்தில் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என இவரை சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்தான்.. ’ஆனால் அதுதான் நிஜம்’ என சொல்ல வைத்தவர் பிரக்ஞானந்தா. உலக செஸ் அரங்கை உலுக்கிய ‘உள்ளூர் பையன்’ என இவரை செல்லமாக சொல்லலாம்.

5 வயதில் போட்டிகளில் களமிறங்கி, தனது ஏழாவது வயதிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வசப்படுத்திய சதுரங்க கில்லாடி. 18 வயதுக்குள் நுழைவதற்கு முன்பே கிராண்ட் மாஸ்டராகும் தகுதியை நிரூபித்தவர்கள் உலகில் இரண்டு வீரர்கள் மட்டும். ஒருவர் உக்ரேனின் செர்கே கர்ஜாகின். மற்றொருவர் உள்ளூர் பிரக்ஞானந்தா.

top videos

    ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து யாவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது இவரது ஹைலைட். உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்திய முதல் இந்திய இளம் வீரர் என்கிற பெருமையோடு சதுரங்க ஆட்டத்தில் கட்டம் கட்டி ஆடும் பிரக்ஞானந்தாவிற்கு மகுடம் விருதுகள் -2022 இல் YOUTH ICON விருதினை வழங்குவதில் நியூஸ்18 தமிழ்நாடு மகிழ்ச்சி கொள்கிறது.

    First published:

    Tags: Magudam Awards, News18 Tamil Nadu