பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளுக்கு, சிறந்த சினிமா கலைஞர்களுக்கு மகுடம் சூடி கொண்டாடும் மகுடம் விருதுகள் 2022 இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த விருது பரிந்துரையில் 2022ல் சிறந்த வணிக முன்னோடி விருது மில்கி மிஸ்ட் டைரி ஃபுட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சதிஷுக்கு வழங்கப்பட்டது.
பெரிய தொழிலதிபராக உருவெடுக்க பெரும் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி அவசியமா..? வெறும் எட்டாம் வகுப்பே போதும் என சொல்லி எட்டாக்கனியை பறித்தவர் மில்க்கி மிஸ்ட் கம்பெனி யின் நிர்வாக இயக்குநர் சதீஷ் குமார். ஈரோட்டிலிருந்து கோபி செட்டிபாளையம் செல்லும் சாலையில் 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது சித்தோடு. இங்கு தான் இருக்கிறது இவரின் மில்க்கி மிஸ்ட் தொழிற்சாலை.
பால் பண்ணையில் ஆரம்பித்து பன்னீர் தயாரிப்பில் பயணித்து இன்று தயிர் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் இவரின் உழைப்பு ‘அடடா’ என வியக்கும் ஒரு ஆச்சரியம். தயிர் விற்பனையில் இவரது சாதனையால் ‘ M For Milky Mist’ ஆனது.
தற்போது வரை 5,000 சில்லர் பாக்ஸ் ……. ஒவ்வொரு டீலருக்கும் ஒரு குளிரூட்டப் பட்ட Refrigerator van ஆகியவற்றை கொடுத்துள்ளார். இது சொல்லும் தரத்தில் இவருக்கு சமரசம் இல்லை என்பதை. 2007-08-இல் இவரின் டேர்ன் ஓவர் ரூ.13.78 கோடி…. அதுவே. 2015-16-இல் அது ரூ.290 கோடி. காரணம்…. சுத்தம்.. சுகாதாரம்… தரம் இவரின் முதல் நோக்கம்.
தயிர் விற்பனையில் தன்னிகரில்லா சாதனை புரிந்த Milky Mist Diary foods pvt Ltd நிர்வாக இயக்குனர் டி. சதீஷ் குமார் அவர்களுக்கு மகுடம் விருதுகள் -2022 இல் Business leader Award விருதினை வழங்குவதில் பெருமை கொள்கிறது நியூஸ்18 தமிழ்நாடு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Magudam Awards