முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மகுடம் விருது 2022 : சிறந்த ஓடிடி திரைப்படம் - ‘மகான்’

மகுடம் விருது 2022 : சிறந்த ஓடிடி திரைப்படம் - ‘மகான்’

மஹான் விருது

மஹான் விருது

Magudam awards 2022 | மகுடம் விருதுகள் -2022 இல் சிறந்த ஓடிடி திரைப்படத்திற்கான விருதை வென்றது விக்ரம் நடிப்பில் வெளியான மகான் திரைப்படம்.

  • Last Updated :
  • Chennai, India

பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளுக்கு, சிறந்த சினிமா கலைஞர்களுக்கு மகுடம் சூடி கொண்டாடும் மகுடம் விருதுகள் 2022 இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த விருது பரிந்துரையில் 2022ல் சிறந்த ஓடிடி திரைப்பட விருது விக்ரம் நடிப்பில் வெளியான மகான் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது ‘மஹான்’.  ஒழுக்க சீலனாக வாழும் ஒரு சாதாரண மனிதன் எப்படி வாழ்க்கையில் அதற்கு நேரெதிர் திசைக்கு செல்கிறான் என்பதை பரபரப்பும் பாசமும் கலந்து சொன்னது இப்படத்தின் கதை. காந்தி மகான் என்ற பெயர் கொண்ட விக்ரம் சாராய சாம்ராஜ்ஜியத்தின் அதிபதி  என்பதே ஆச்சரிய அசத்தல் ஆனது.

தன்னுடைய அட்டகாசமான நடிப்பினாலும், நுணுக்கமான உடல்மொழிகளாலும் படம் முழுக்க விக்ரமின் ராஜ்ஜியம். ஒரு நல்ல கலைஞனுக்கு தேவை அவரது முழுமையான நடிப்பை வெளிக்கொண்டு வரும் ஒரு நல்ல கதாபாத்திரம். அப்படியாக விக்ரமிற்கு காந்தி மகான்.  ‘‘நா அம்மா புள்ள.. திடீர்னு எப்புடி அப்பா பேச்ச கேக்குறது..?  என விக்ரமிற்கு எதிராக அவரது மகன் துருவ் விக்ரம் நிற்கும் போது அப்பாவான விக்ரம் கலங்கும் காட்சிகளில் விக்ரமிற்கு நிகர் விக்ரமே.

தனது சாம்ராஜ்ஜியத்தின் கூட்டாளி மகன் கொல்லப்படும் தருணத்தில், அப்பாவும் பிள்ளையும் மோதிக்கொள்ளும் அந்த ஒற்றை காட்சியில்  இயலாமையில் கோபம், அழுகை, விரக்தி என நடிப்பை கொட்டிய விக்ரமை பார்த்து  ‘மீண்டும் வந்து விட்டான் எங்கள் நடிப்பு ராட்சசன்” என கொண்டாடியது சினிமா உலகம்.

மகுடம்  விருதுகள் -2022 இல்  BEST OTT PREMIERE விருதினை ’மகான்’ திரைப்படத்திற்கு வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறது நியூஸ்18 தமிழ்நாடு.

top videos
    First published:

    Tags: Magudam Awards