முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மகுடம் விருதுகள் 2022 : சிறந்த படத்துக்கான விருது - டாணாக்காரன்!

மகுடம் விருதுகள் 2022 : சிறந்த படத்துக்கான விருது - டாணாக்காரன்!

டாணாக்காரன்

டாணாக்காரன்

Magudam awards 2022 : மகுடம் விருதுகள் -2022 இல் Best movie விருதினை வாங்கிய திரைப்படம் டாணாக்காரன்

  • Last Updated :
  • Chennai, India

பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளுக்கு, சிறந்த சினிமா கலைஞர்களுக்கு மகுடம் சூடி கொண்டாடும் மகுடம் விருதுகள் 2022 இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த விருது பரிந்துரையில் 2022ல் சிறந்த படத்துக்கான விருது டாணாக்காரன் படத்துக்கு வழங்கப்பட்டது

இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத சொல்லப்பட வேண்டிய ஒரு `போலீஸ்' கதையை சொல்லிய திரைப்படம் ‘டாணாக்காரன்’காவல்துறை அதிகாரத்தின் மூர்க்கத்துக்குப் பின்னான காரணங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் நிஜ சினிமா. விதவிதமான போலீஸ் கதைகளை பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு அறிமுக இயக்குநர் தமிழ். வேறொரு கோணத்தில் எடுத்த பரேடே இப்படம். காவல்துறை பயிற்சிக்கூடத்தில் நடக்கும் அடக்குமுறைகளால் எழும் கோபத்தை அடக்கிக்கொண்டு திமிறி எழாமல் அமைதியாக காரியத்தை முடிக்கும் விக்ரம் பிரபுவை தனித்துக் காட்டியதும் டாணாக்காரனே.

ஈஸ்வர மூரத்தியாக லத்தியுடன் பரேடு கிளப்பும் அதிகாரி லால்…. கரை படிந்த காக்கிகளை நினைவுக்குக் கொண்டுவரும் முத்து பாண்டி மதுசூதனராவ்…எல்லாவற்றையும் இழந்தும் நேர்மையாக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் என ஒவ்வொரு கதாபாத்திரமும் களத்தில் கலைகட்டினர்.

‘இந்த சிஸ்டம்,மொரட்டு வெள்ளக்காரனுக்கும் முட்டாள்தனமான அரசியல்வாதிக்கும் பிறந்த குழந்தைடா’’.. ‘‘150 வருஷமா சீருடையக்கூட மாத்தாத டிபார்ட்மென்ட்டோட சட்டத்தை மாத்தப் போறேன்னு வந்து நிற்கிற’’ என்பதுபோன்ற வசனங்கள் டாணாக்காரனை தனித்துவமாக நிறுத்தியது.

காவல்துறை அதிகாரிகள் ஏன் இவ்வளவு மூர்க்கமாகவும், சாமானியர்களை ஏளனமாகவும் பார்க்கிறார்கள் என்பதற்கு பின்னிருக்கும் உளவியல் குறித்து பாடம் சொன்ன ‘டாணாக்காரன்’ திரைப்படத்திற்கு மகுடம் விருதுகள் -2022 இல் Best movie விருதினை வழங்குவதில் பெருமை கொள்கிறது நியூஸ்18 தமிழ்நாடு.

First published:

Tags: Magudam Awards