முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மகுடம் விருதுகள் 2022 : சிறந்த இயக்குநர் - லோகேஷ் கனகராஜ்

மகுடம் விருதுகள் 2022 : சிறந்த இயக்குநர் - லோகேஷ் கனகராஜ்

லோகேஷ்

லோகேஷ்

Magudam awards 2022 : மகுடம் விருதுகள் -2022 இல் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றார் லோகேஷ் கனகராஜ்.

  • Last Updated :
  • Chennai, India

பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளுக்கு, சிறந்த சினிமா கலைஞர்களுக்கு மகுடம் சூடி கொண்டாடும் மகுடம் விருதுகள் 2022 இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த விருது பரிந்துரையில் 2022ல் சிறந்த இயக்குநருக்கான விருது லோகேஷ் கனகராஜுக்கு வழங்கப்பட்டது.

இன்றைய தலைமுறை சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர். நான்கு கதைகளை ஒரு புள்ளியில் இணைத்து வித்தியாசமாக கதை சொன்ன இவரது ‘மாநகரம்’ திரைக்கதையின் மாயாஜாலம். ஓர் இரவோடு பார்வையாளர்களை சிறை பிடித்த இவரது ‘கைதி’ பாலிவுட் வரை படம் போட்டது ஒரு பரவச கதை. விஜய்க்கு விஜய் சேதுபதியை வில்லனாக்கிய இவரை தாராளமாக சொல்லலாம் இளம் இயக்குனர்களின் ‘மாஸ்டர்’ என. கமல்ஹாசனை கர்ஜிக்க வைத்த இவரது ‘விக்ரம்’ வின்ணைத்தாண்டியும் வசூல் மழை பொழிந்து வரலாறானது.

தன் படைப்புக்களை ஒன்றோடு ஒன்று இணைத்து கதைகள் சொல்லும் வித்தையால் தானா சேர்ந்த கூட்டத்தை உருவாக்கியது இவரின் ’லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்’

top videos

    இவரின் கால்சீட்டுக்கு சல்மான் கான்களும் ஷாருக் கான்களும் காத்திருக்க ‘லியோ’ வின் மாஸ் விருந்துக்கு காத்திருக்கிறது இவரது யுனிவர்ஸின் பெரும் படை. மகுடம் விருதுகள் -2022 இல் BEST DIRECTOR விருதினை லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறது நியூஸ்18 தமிழ்நாடு.

    First published:

    Tags: Magudam Awards