முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மகுடம் விருதுகள் 2022 : இலக்கியத்துக்கான விருது - மு. ராஜேந்திரன் IAS

மகுடம் விருதுகள் 2022 : இலக்கியத்துக்கான விருது - மு. ராஜேந்திரன் IAS

கல்யாணசுந்தரம்

கல்யாணசுந்தரம்

Magudam awards 2022 : நியூஸ் 18 தமிழ்நாடு நடத்தும் மகுடம் விருதுகள் 2022 சென்னையில் நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளுக்கு, சிறந்த சினிமா கலைஞர்களுக்கு மகுடம் சூடி கொண்டாடும் விதமாக நியூஸ் 18 தமிழ்நாடு நடத்தும் மகுடம் விருதுகள் 2022 இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் இலக்கிய விருதினை மு. ராஜேந்திரன் IAS பெற்றார்.

இந்தியாவின் முதல் சுதந்திர எழுச்சி தமிழ்நாட்டிலிருந்துதான் துவங்கியது என்பதை மிக ஆதாரபூர்வமாக நிறுவியது இவரது படைப்பு ‘காலா பாணி’. அவர்தான் 2022-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதை வென்ற எழுத்தாளர் மு. ராஜேந்திரன் IAS.

தமிழ் இலக்கியம் மற்றும் வரலாற்றில் தீவிர ஆர்வம் கொண்ட இவர் படித்ததோ ஆங்கில இலக்கியம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திருக்குறளில் சட்டக்கூறுகள் குறித்தும் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார்.

இவர் எழுதிய ‘வடகரை: ஒரு வம்சத்தின் வரலாறு’ நூல் 600 ஆண்டு கால தென் தமிழக வரலாற்றைச் சொன்னது. சட்ட வல்லுநர் திருவள்ளுவர், சோழர் காலச் செப்பேடுகள், பல்லவர் காலச் செப்பேடுகள், சேரர் காலச் செப்பேடுகள், பாதாளி, பாண்டியர் காலச் செப்பேடுகள், வெயில் தேசத்தில் வெள்ளையர், யானைகளின் கடைசி தேசம், செயலே சிறந்த சொல், காலா பாணி என இவரது படைப்புக்கள் ஒவ்வொன்றும் ஒரு வரலாற்றை சொன்னது.

இவரது எழுத்துப் பணிக்காக டான்சீறி சோமா விருது, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது உள்ளிட்ட விருதுகள் இவர் வசம் வந்தது. தமிழ்நாட்டில் காளையார் கோவில் போரை முன் வைத்து நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதையாக இவர் எழுதிய ’காலா பாணி’ சாகித்ய அகாடமி விருதினை வென்று இலக்கியத்தின் உச்சத்தை தொட வைத்தது. மகுடம் விருதுகள் -2022 இல் இலக்கிய விருதினை மு. ராஜேந்திரன் IAS அவர்களுக்கு வழங்குவதில் நியூஸ்18 தமிழ்நாடு பெருமை கொள்கிறது.

top videos
    First published:

    Tags: Magudam Awards, News18 Tamil Nadu