பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளுக்கு, சிறந்த சினிமா கலைஞர்களுக்கு மகுடம் சூடி கொண்டாடும் விதமாக நியூஸ்18 தமிழ்நாடு நடத்தும் மகுடம் விருதுகள் 2022 இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் மகுடம் விருதுகள் -2022 இல் இந்திய சினிமாவின் பெருமை விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.
”‘நீ பெரும் கலைஞன், நிரந்தர இளைஞன், ரசனை மிகுந்த ரகசிய கலைஞன் ‘ என தமிழ் சினிமா மெச்சும் உலக நாயகன். ’களத்தூர் கண்ணம்மா’ கை பிடித்து கூட்டி வந்த இவர்தான் தற்போது தமிழ் சினிமாவை கை பிடித்து கூட்டி செல்லும் கலை ஞானி. காதல் இளவரசனாய் கணக்கை தொடங்கி நடிப்பு அரசனாய் ஆட்சி செய்யும் அபூர்வ கலைஞன் இவர்.
நடிப்பின் மகராசனும் இவரே, படத்திற்கு படம் புது அவதாரம் எடுக்கும் நடிப்பு ராட்சசனும் இவரே.
சாதி மதம் என அத்தனையும் கடந்து அன்பே சிவம் என அன்பை போதிக்கும் இவரது திரை மொழி.
திரையில் சாகா வரம் பெற்ற உத்தம வில்லன் இந்த சகலகலா வல்லவன். தமிழ் சினிமா அதுவரை எட்டிடாத புதிய வர்த்தக எல்லைகளை எட்டி நடிப்பில் மட்டுமல்ல வசூலிலும் தானே சக்கரவர்த்தி என நிரூபித்த்த விசித்திர விக்ரமும் இவரே.,
விருதுகள் வழங்கி சிலரை கௌரவிக்கலாம் ஆனால் ஒரு சிலரால் மட்டுமே விருதுகளை கௌரவிக்க முடியும்.
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு, உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு.” நடிகர் கமல்ஹாசனை பாராட்டி விருது வழங்கப்பட்டது.
தமிழ் சினிமாவின் பொக்கிஷம், நடிப்பு கலையின் முடி சூடா மன்னனான உலக நாயன் கமல்ஹாசன் அவர்களுக்கு மகுடம் விருதுகள் -2022 இல் இந்திய சினிமாவின் பெருமை விருதினை வழங்குவதில் நியூஸ்18 தமிழ்நாடு பெருமை கொள்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Magudam Awards, News18 Tamil Nadu