முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மகுடம் விருதுகள் 2022 : கலை மற்றும் கலாச்சார விருது - ‘தெருக்குரல்’ அறிவு

மகுடம் விருதுகள் 2022 : கலை மற்றும் கலாச்சார விருது - ‘தெருக்குரல்’ அறிவு

அறிவு

அறிவு

Magudam awards 2022 | மகுடம் விருதுகள் -2022 இல் கலை மற்றும் கலாச்சார விருதை வென்றார் ‘தெருக்குரல்’ அறிவு

  • Last Updated :
  • Chennai, India

அடித்தட்டு மக்கள் படும் பாட்டை பாடல்களால் சொல்லும் பாட்டுக்காரன். அறிவு என விளிக்கப்படும் அன்பான இவரை ‘தெருக்குரல்’ அறிவு என சொன்னால் தமிழ்நாடு அறியும்.

அதிகாரத்திற்கு எதிரான….. ஒடுக்கப்பட்ட மக்களின் வலி குறித்தான இவரது பல பாடல்கள் கவனம் பெற்றது. இயக்குனர் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவான ’The Casteless Collective’ வோடு இணைந்து இவர் பாடிய பல பாடல்கள் மேடையை அதிரவிட்டது.

ரஜினிகாந்த் - பா.ரஞ்சித் கூட்டணியில் வெளியான 'காலா' படத்தில் 'உரிமையை மீட்போம்' பாடலை எழுதியதன் மூலம் தமிழ் சினிமாவிலும் இவரது குரல் ஒலிக்க தொடங்கியது.

’வட சென்னை’ , ‘ஜிப்சி’ , ’சூரரைப் போற்று’. ‘மாஸ்டர்’ திரைப்படங்களில் பாடல்களை எழுதியும் பாடியும் வெள்ளித்திரையையும் தெறிக்கவிட்டவர் ‘தெருக்குரல்’ அறிவு.

”அன்னக்கிளி அன்னக்கிளி அடி ஆலமரக்கெல வண்ணக்கிளி நல்லபடி வாழச்சொல்லி இந்த மண்ண கொடுத்தானே பூர்வக்குடி” என அறிவு எழுதியும் பாடியும் வெளிவந்த ‘என்ஜாய் எஞ்சாமி' ஆல்பம் வைரல் ஹிட் ஆனது தனிக்கதை. மகுடம் விருதுகள் -2022 இல் ARTS & CULTURE விருதினை ‘தெருக்குரல்’ அறிவு அவர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறது நியூஸ்18 தமிழ்நாடு.

top videos
    First published: