முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் - துல்லியமாக வழங்கி முதலிடம் பிடித்த நியூஸ் 18 தமிழ்நாடு

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் - துல்லியமாக வழங்கி முதலிடம் பிடித்த நியூஸ் 18 தமிழ்நாடு

நியூஸ் 18 தமிழ்நாடு

நியூஸ் 18 தமிழ்நாடு

கர்நாடக தேர்தல் முடிவுகளை துல்லியமாக வழங்கிய வகையில் பேஸ்புக் பக்கத்தில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி முதலிடம் பிடித்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், காங்கிரஸ் 136 தொகுதிகளிலும் பாஜக 65 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளிலும் வெற்றியடைந்துள்ளது.

கர்நாடக தேர்தல் முடிவுகளை நியூஸ் 18 தமிழ்நாடு துல்லியமாக வழங்கியது. மேலும் இது பேஸ்புக் பக்கத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனையடுத்து  கர்நாடக தேர்தல் முடிவுகளை வழங்கிய வகையில் நியூஸ் 18 தமிழ்நாடு பேஸ்புக் பக்கம் 51 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்து தமிழ்நாடு செய்தி ஊடகங்களின் வரிசையில் முதலிடம் பிடித்தது.

இதையும் படிக்க |  Exclusive : "அமித் ஷா சொல்லியும் அமமுகவை கூட்டணியில் சேர்க்க மறுத்துவிட்டர் ஈபிஎஸ்.." - டிடிவி தினகரன்

பேஸ்புக்கில் 31 லட்சம் பார்வையாளர்களைப் பெற்று சன் நியூஸ் இரண்டாம் இடத்திலும், 28 லட்சம் பார்வையாளர்களைப் பெற்று புதிய தலைமுறை 3 ஆம் இடத்தையும், பாலிமர் நியூஸ் தொலைக்காட்சி 21 லட்சம் பார்வையாளர்களுடன் 4 ஆம் இடத்திலும் உள்ளது.

First published:

Tags: Karnataka Election 2023, News 18