முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்? - 10-ம் தேதி வரை வெளுத்து வாங்கப்போகும் மழை!

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்? - 10-ம் தேதி வரை வெளுத்து வாங்கப்போகும் மழை!

மழை

மழை

Weather update | தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று 6ஆம் தேதி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு தமிழக கடலோரப்பகுதிகளின் மேல்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று 6-ஆம் தேதி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியது. இதன் காரணமாக அப்பகுதிகளில் 8-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 9-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.

06.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

07.05.2023 மற்றும் 08.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

09.05.2023 மற்றும் 10.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

06.05.2023: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

07.05.2023 மற்றும் 08.05.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

09.05.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்,  மத்திய வங்கக்கடல் மற்றும்  அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

10.05.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80  கிலோ மீட்டர் வேகத்திலும்  மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்,  மத்திய வங்கக்கடல் மற்றும்  அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

top videos

    மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும், ஆழ் கடலிலுள்ள  மீனவர்கள் 7-ம்  தேதிக்குள் கரைக்கு திரும்புமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Cyclone, Heavy rain