முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இன்று நீட் தேர்வு : ஆடை முதல் அட்மிட் கார்டு வரை... மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!

இன்று நீட் தேர்வு : ஆடை முதல் அட்மிட் கார்டு வரை... மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!

இன்று நீட் தேர்வு

இன்று நீட் தேர்வு

நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் பல விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுவது அவசியம்

  • Last Updated :
  • Tamil Nadu, India

2023 நீட் தேர்வுகள் இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. இளநிலை மருத்துவமான எம் பி பி எஸ் மற்றும் பி டி எஸ் பல் மருத்துவம், ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி படிப்பில் சேர்வதற்கான தகுதி தேர்வு நீட் ஆகும்.

நாடு முழுவதும் இன்று நடைபெறும் தேர்வினை எழுத 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் கடும் கெடுபிடிகள் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படும். மேலும், தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பல்வேறு விதிமுறைகளும் உள்ளன.

அதன் விபரம் பின்வருமாறு:-

மாணவர்கள் துப்பட்டா, ஜீன்ஸ் ஆகியவை அணிய அனுமதி இல்லை. அனைவரும் அரைக்கை சட்டகள் மட்டுமே அணிந்து வர வேண்டும். முழு கை சட்ட உடைகளோ, பெரிய பட்டன் கொண்ட ஆடைகளோ அணியக் கூடாது. தேர்வு அறைக்குள் கைகடிகாரம், கேமரா, பர்ஸ், ஹேண்ட்பேக், பெல்ட், தொப்பை போன்றவை கொண்டு செல்ல கூடாது. ரப்பர், ஸ்கேல், கல்குலேட்டர் போன்ற உபகரணங்களை கொண்டு செல்லவும் அனுமதி இல்லை.

மாறாக அவற்றை வைத்திருந்தால், அதை கண்காணிப்பாளர்கள் அப்புறுப்படுத்தி அதன் பின்னர் தான் உள்ளே அனுமதிப்பார்கள். நகைகள், காப்புகள், போன்றவை அணியக் கூடாது. தலை முடி பின்னல் மற்றும் கொண்டைகள் வைத்துக்கொள்ளும், பூக்கள் வைக்கவும் அனுமதி இல்லை.

அதேபோல், தேர்வர்கள் ஷூக்கள் அணிந்து வர அனுமதியில்லை. குறைவான உயரம் கொண்ட (லோ ஹீல்ஸ்) செருப்புகள் மட்டுமே அணிய அனுமதி. மேலும், தேர்வு அறைக்கு செல்லும் மாணவர்கள், செல்போன், மைக் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் கொண்டு செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மருத்துவ தேவைக் காரணமாக உடல்நல குறைவு உள்ள மாணவர்கள் தேர்வு அறைக்கு பழங்கள், மருந்துகள் ஆகியவற்றை உரிய அனுமதியுடன் கொண்டு செல்லலாம். அதேவேளை, பேக் செய்யப்பட்ட உணவு பொருள்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

இதையும் படிங்க: நாளை வெளியாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு தேர்வுகள் துறை

top videos

    மாணவர்கள் அனைவரும் அட்மிட் கார்டில் அறிவுறுத்தப்பட்டுள்ள படி உரிய நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையத்திற்குள் சென்றிருக்க வேண்டும். கண்காணிப்பாளர்கள் கூறும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். தேர்வு நண்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 வரை நடைபெறும். தேர்வு முடியும் வரை யாரும் அறையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    First published:

    Tags: Neet, Neet Exam