நீட் தேர்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். இளநிலை மருத்துவமான எம் பி பி எஸ் மற்றும் பி டி எஸ் பல் மருத்துவம், ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி படிப்பில் சேர்வதற்கான தகுதி தேர்வு நீட் ஆகும்.
நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தேர்வினை எழுத 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டைவிட 2 லட்சத்து 57 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகளும், ஒன்பது லட்சத்து 2 ஆயிரத்து 930 மாணவர்களும் நீட் தேர்வினை எழுத விண்ணப்பித்துள்ளனர்.
31 நகரங்களில் நீட் தேர்வு
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் 95 ஆயிரத்து 823 மாணவிகளும், 51 ஆயிரத்து 757 மாணவர்களும் அடங்குவர். மாநிலம் முழுவதும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, மதுரை, கடலூர், கரூர், திருச்சி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், உதகை உள்ளிட்ட 31 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.
நீட் தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் உள்ளிட்ட
நான்கு பாடங்களில் கேள்விகள் கேட்கப்படும். சரியான விடையை தேர்ந்தெடுக்கும் முறையில் நீட் தேர்வு நடத்தப்படும்.
தேவையான ஆவணங்கள்
தேர்வு நுழைவுச் சீட்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ, அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை, மாற்று திறனாளிகளாக இருந்தால் அதற்கான சான்று ஆகியவற்றை தேர்வர்கள் வைத்திருக்க வேண்டும்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு, உருது என 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது. ஆங்கில மொழியில் தேர்வு எழுதுபவர்களுக்கு ஒரே ஒரு வினா தாளும் மற்ற மொழிகளில் தேர்வு எழுதுபவர்களுக்கு, அவர்கள் தேர்வு செய்த மொழி மற்றும் ஆங்கில வினாத்தாள்கள் கொடுக்கப்படும்.
இதையும் படிங்க: வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்? - 10-ம் தேதி வரை வெளுத்து வாங்கப்போகும் மழை!
வன்முறை வெடித்த மணிப்பூரில் மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்த மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் சுமார் 5 ஆயிரத்து 751 மாணவர்கள் தேர்வு எழுத 2 மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில், அசாதாரண சூழலால் மாணவர்களின் நலன் கருதி தேர்வை ஒத்திவைக்க மத்திய இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில், மணிப்பூரில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.