தொழிற்சாலைகளில் இருந்து எவ்வளவு தூரத்தில் கல்வி நிறுவனங்களை தொடங்கலாம் என பரிந்துரைப்பதற்கு குழுவை நியமிக்குமாறு, தமிழ்நாடு அரசுக்கு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், குரும்பபாளையத்தில் 1990 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த வார்ப்பாலைகளால் மாசு ஏற்படுவதாக கூறி, அப்பகுதியில் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பள்ளி சார்பில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதை விசாரித்த தீர்ப்பாயம், 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாசு கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளின்படி செயல்பட்டு வரும் வார்ப்பாலைகளுக்கு அருகில் பள்ளியை துவங்கி விட்டு, மாசு ஏற்படுத்துவதாக கூறி ஆலைகளை மூட உத்தரவிடும்படி கோர முடியாது என்றது.
இதையும் வாசிக்க: மாநில கல்விக் கொள்கை: அறிக்கை வழங்க கால அவகாசத்தை நீட்டித்த தமிழ்நாடு அரசு
மாணவர்களின் நலனை கருதியிருந்தால், ஆலைகளுக்கு அருகில் பள்ளியை துவங்கியிருக்க கூடாது என்ற தீர்ப்பாயம்பள்ளியும், வார்ப்பாலைகளும் பசுமைப் போர்வை ஏற்படுத்தும் வகையில் மரங்களை வளர்க்க வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், தொழிற்சாலைகளில் இருந்து எவ்வளவு தூரத்தில் கல்வி நிறுவனங்களை துவங்கலாம் என எந்த விதியும் இல்லாததால், அதுகுறித்து பரிந்துரைகளை வழங்க பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித் துறை செயலாளர்கள், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.