முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தீட்சிதர் குழந்தைகளுக்கு இரு விரல் பரிசோதனை நடந்தது... மாற்றிப் பேசும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்...

தீட்சிதர் குழந்தைகளுக்கு இரு விரல் பரிசோதனை நடந்தது... மாற்றிப் பேசும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்...

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த்

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த்

குழந்தை திருமணம் நடைபெற்றதாக சிறுமி மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் வற்புறுத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என்று தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

குழந்தைத் திருமணம் தொடர்பாக, தீட்சிதர் குழந்தைகளுக்கு இரு விரல் பரிசோதனை நடைபெறவில்லை என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், நேற்று முன்தினம் தெரிவித்த நிலையில், நேற்று நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தீட்சிதர் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை நடைபெற்றதாக கூறினார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் அவர்களது குழந்தைகளுக்கு, குழந்தைத் திருமணம் செய்து வைத்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் கடலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தேசிய குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் மற்றும் மருத்துவ குழுவினர் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மற்றும் குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்ட தீட்சிதர்களின் குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டனர். சிதம்பரத்தில் குழந்தை திருமணமே நடைபெறவில்லை என்றும் கட்டாயத்தின் பெயரில் தீட்சிதர்களின் குழந்தைகள் ஒப்புக்கொண்டதாகவும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறினார்.

இருவிரல் பரிசோதனை நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை. ஆனால் குழந்தைகளின் அந்தரங்க பகுதிகள் தொடப்பட்டது உண்மை என்றும் குறிப்பிட்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மல்லூர் அருகே உள்ள பரவச உலகம் தீம் பார்க்கில் கடந்த 11-ம் தேதி சேலத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செய்திகள் அடிப்படையில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது.

இதன் கீழ் ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த், தீம் பார்க்கிற்கு நேரிடையாக சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சிறுவன் எந்தெந்த பகுதிகளுக்கு சென்றார். எவ்வளவு நேரம் தண்ணீரில் விளையாடினார் என்பது குறித்து தீம்‌ பார்க் நிர்வாகத்தினர் மற்றும் அங்கு பணிபுரிந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், ’சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என மருத்துவ அறிக்கையிலே உள்ளதாக கூறினார். இதற்கான ஆதாரம் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறோம்.... ஜப்பானில் மு.க.ஸ்டாலின் பேச்சு

top videos

    நேற்று தான் கூறிய கருத்தை சில ஊடகங்கள் ஆளுநருக்கு எதிராக திரித்து கூறப்பட்டுள்ளதாகவும், குழந்தை திருமணம் நடைபெற்றதாக சிறுமி மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் வற்புறுத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Namakkal