முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நாமக்கலில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்... வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நாமக்கலில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்... வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சைலேந்திர பாபு

சைலேந்திர பாபு

கடந்த மார்ச் 11ம் தேதி, கரப்பாளையும் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பட்டதாரி பெண் ஆடு மேய்க்க சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே 28 வயது இளம்பெண், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 11ம் தேதி, கரப்பாளையும் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பட்டதாரி பெண் ஆடு மேய்க்க சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் இரு சமூகத்தினர் இடையேயான பிரச்னையாக மாறியுள்ளது.

இந்நிலையில் வெல்லக்கொட்டகை, வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தீ வைப்பது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் நடந்தேறியது.

இதையும் வாசிக்கமரக்காணம் கள்ளச் சாராய உயிரிழப்பு: அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்

இந்த நிலையில், ஜேடர்பாளையத்தில் கரும்பு ஆலைக் கொட்டகையில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த அறைக்கு தீ வைக்கப்பட்டது. அறையில் இருந்த ராகேஷ், சுகுராம், யஸ்வந்த், கோகுல் ஆகிய நான்கு தொழிலாளர்கள் காயமடைந்தனர். இந்த நிலையில் இளம்பெண் கொலை வழக்கை CBCID விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

top videos
    First published:

    Tags: CBCID