தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, “தமிழ்நாட்டில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அதிமுகவுடன் கூட்டணி என்று முடிவு எடுத்தால் எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்” என்று பேசியதாக தகவல் வெளியானது.
இவர் கூறியதாக சொல்லப்பட்ட கருத்துக்கள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் பாஜக தரப்பில், பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியதாக வரும் செய்தி தவறானது” என விளக்கம் அளித்திருந்தார்.
இதையும் படிக்க : அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசினாரா? பாஜக விளக்கம்..!
இந்நிலையில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திராவிடக் கட்சிகளின் கூட்டணி இல்லாமல் தனித்து பாஜக போட்டியிட வேண்டும் என்றும், அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக கூறப்படுவது அண்ணாமலையின் சொந்த கருத்து” என தெரிவித்துள்ளார்.
மேலும் கூட்டணி குறித்து கட்சியின் தேசிய தலைமை முடிவு செய்யும் என்றும் இதுவரை தமிழக வரலாற்றில் அனைத்து கட்சிகளும் கூட்டணியோடு தான் போட்டியிட்டிருக்க்றார்கள் என்றும் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AIADMK Alliance, Annamalai, BJP, Bjp state president, Nainar Nagendran