முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிப்பு... நன்றி தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி!

மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிப்பு... நன்றி தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி!

சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன்

Madurai Metro | மதுரையில் மெட்ரோ திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்ற மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மதுரையில் மெட்ரோ திட்டம் வரப்போவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதையடுத்து, சு. வெங்கடேசன் எம்.பி. முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்குவது குறித்து பல ஆண்டுகளாக சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை விடுத்து வந்தார். இந்த நிலையில் இன்று தமிழக பட்ஜெட்டில், மதுரை மாநகரம் தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சு.வெங்கடேசன் எம்.பி., நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக முதலமைச்சருக்கு மதுரை மக்கள் சார்பில் நன்றி என தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Madurai, Metro Train, Su venkatesan, TN Budget 2023