முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காற்றே இருக்காது.. புழுக்கம் கூடும்.. மோக்கா புயலால் 'அசெளகரியம்'.. ஒரே வார்த்தையில் சொன்ன வானிலை ஆய்வு மையம்!

காற்றே இருக்காது.. புழுக்கம் கூடும்.. மோக்கா புயலால் 'அசெளகரியம்'.. ஒரே வார்த்தையில் சொன்ன வானிலை ஆய்வு மையம்!

வெப்பநிலை அதிகரிக்கும்

வெப்பநிலை அதிகரிக்கும்

Heat Wave | வழக்கத்திற்கு அதிகமாக 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வெப்பநிலை வழக்கத்திற்கு அதிகமாக 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பநிலை பொருத்தவரை மே 12 முதல் மே 16 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மிகத்தீவிர புயலாக மாறிய மோக்கா புயல், மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கிலோ மீட்டர் மேற்கு-வடமேற்கே நிலைகொண்டுள்ளது.  இதனால் தமிழ்நாட்டின் அருகே சூழ்ந்துள்ள ஈரப்பதம் இழுக்கப்பட்டு வெப்பநிலை அதிகரிக்கும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) ஏற்படும். இதன் காரணமாக அசௌகரியமான சூழல் ஏற்பட்டு,வெக்கையான சூழல் நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மோக்கா புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீவிர புயலாக வலுப்பெற்று மோக்கா புயல் வடக்கு திசையில் நகர்ந்து இன்று (12.05.2023) காலை 05.30 மணி அளவில் மிகத்தீவிர புயலாக மாறியுள்ளது. இது மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கிலோ மீட்டர் மேற்கு-வடமேற்கே நிலைகொண்டுள்ளது. இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற்று 14.05.2023 நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 175 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Also Read : மிகத்தீவிர புயலாக வலுப்பெற்ற மோக்கா...தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..

இதனால், தமிழ்நாட்டில் இன்று (மே 12 ) முதல் மே 16 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

மேலும், தென்மேற்கு வங்கக்கடல், தமிழக - இலங்கை கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் அதிகமாகக் காற்று வேகமாக வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Cyclone, Heat Wave, Weather News in Tamil