முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தொழில்முனைவோருக்கான திட்டங்களை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும் - ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுரை

தொழில்முனைவோருக்கான திட்டங்களை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும் - ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுரை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வில் ஈடுபட்டார்.

  • Last Updated :
  • Viluppuram, India

தொழில் முனைவேருக்கான திட்டங்களை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். இரண்டாவது நாளாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர்கள் உதயநிதி, பொன்முடி, கே.என்.நேரு, ஏ.வ.வேலு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதலமைச்சரின் செயலாளர் உதயச்சந்திரன், 3 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துறைச் செயலாளர்கள் மட்டுமே முதலமைச்சரை சந்திக்க முடியும் என்ற நிலை மாறியிருப்பதாக கூறினார்.

top videos

    முறையான குடிநீர், சுகாதார வசதிகளை வழங்க வேண்டும் எனவும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார். ஆய்வுக் கூட்டம் நிறைவடைந்த பின்னர், முதலமைச்சர் சென்னை திரும்பினார்.

    First published:

    Tags: MK Stalin