முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கருணாநிதி பாணியில் உரையை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - உற்சாகமடைந்த தொண்டர்கள்!

கருணாநிதி பாணியில் உரையை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - உற்சாகமடைந்த தொண்டர்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - கருணாநிதி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - கருணாநிதி

கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது பாணியிலே தனது பேச்சை தொடங்கியது திமுகவினரை உற்சாகப்படுத்தியது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சி பெரம்பூரில் உள்ள பின்னி மில்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் பாணியிலே, “தமிழர்களே.. தமிழர்களே..” என தனது பேச்சை தொடங்கினார். அவர் பேச்சை தொடங்கியது அங்கிருந்த திமுகவினரை உற்சாகப்படுத்தியது.

இதையடுத்து பேசிய முதலமைச்சர், ஆகஸ்ட் 7ஆம் தேதி கலைஞர் நினைவிடம் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தல் யார் ஆட்சி அமைக்கப்படக்கூடாது என்பதற்கான தேர்தல் என்றும், வரும் 23ஆம் தேதி இதற்காக பீகாரில் எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார். மேலும் தேவையற்ற வேறுபாடுகளை களைந்து எதிர்கட்சிகள் பாஜகவை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, ஆளுநர் நிகழ்த்தக்கூடிய சித்து விளையாட்டுகளை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் பொறுத்தது போதும் பொங்கி எழு என்கிற இடத்திற்கு வந்துள்ளதாகவும், திராவிடத்தை பார்த்து சிலர் பயப்பட்டு கண்ணை மூடிக்கொண்டு திராவிடத்தை எதிர்ப்பதாகவும், எங்கும் நிறைந்திருந்து கருணாநிதி கண்காணிப்பதாக கருதியே அரசு திட்டங்கள் தீட்டப்படுவதாக குறிப்பிட்ட முதலமைச்சர், பெரியார், அண்ணா, கலைஞர்தான் எங்களது வழிகாட்டி என தெரிவித்தார்.

' isDesktop="true" id="1009350" youtubeid="8A3-LTcL0BA" category="tamil-nadu">

திமுக 1949 ஆம் ஆண்டு வடசென்னை ராபின்சன் பூங்காவில் தொடங்கப்பட்டது. அதன் நினைவாகவே வடசென்னையில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்வை நடத்துவதாக கூறினார். மேலும் திமுக ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சி என்றும் உலகதலைவராக செயல்பட்டவர் கருணாநிதி என்ற புகழாரம் சூட்டிய முதலமைச்சர், திராவிட நிர்வாகியில் கோட்பாட்டை உருவாக்கியவர் கலைஞர் என்று குறிப்பிட்டார்.

First published:

Tags: DMK, DMK leader Karunanidhi, Karunanidhi's memorial, MK Stalin