போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் திமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின் 25-ஆவது ஆண்டு பொதுக்குழு மற்றும் பொன்விழா நிறைவு மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘தொழிலாளர்களுக்கு திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை அவர் பட்டியலிட்டார். ராணுவ வீரர்கள், காவலர் சீருடையில் இருப்பது போன்று, தொமுச தோழர்களும் சீருடையில் இருப்பதை பார்க்கும்போது அனைவருக்கும், எழுச்சியும், உணர்ச்சியும் ஏற்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
அண்ணா அறிவாலயம் கட்டப்பட்ட பின், அன்பகத்தைப் பெற திமுக இளைஞரணி மற்றும், தொ.மு.ச. இடையே போட்டி நிலவியதாகவும், முதலில் 10 லட்சம் ரூபாய் நிதி திரட்டி இளைஞரணி வெற்றி பெற்றதையும் முதலமைச்சர் ஸ்டாலின் நினைவு கூர்ந்தார். இளைஞர்கள் மனதளவில் தளர்ந்து விடக்கூடாது என அன்றைக்கு தொழிலாளர் அணி தங்களுக்கு விட்டுக் கொடுத்துள்ளதாக தான் நினைக்கிறேன் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘தொழிலாளர்களுக்கு 8.5 விழுக்காடு முதல் 22 விழுக்காடு வரை போனஸ் கிடைக்க மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர காரணமாக இருந்தவர் கருணாநிதி. கடந்த காலத்தில் அதிமுக அரசு நிறைவேற்றாமல் விட்டுச் சென்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வை, ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே ஆலோசனை நடத்தி நிறைவேற்றியது இந்த அரசு.
சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு- கர்நாடகா ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரிய சித்தராமையா
தொழிலாளர் அணியுடன் எனக்கு எப்போதுமே நட்பு கலந்த ஒரு மோதல் உண்டு. மோதல் என்பதை ஊடல் என்று கூட சொல்லலாம். ஊடல் இருந்தாலும் கூடலும் எப்போதுமே இருக்கத்தான் செய்கிறது’ என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: MK Stalin