முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தோனி சென்னையின் செல்லப்பிள்ளை.... முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

தோனி சென்னையின் செல்லப்பிள்ளை.... முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

தோனி, மு.க.ஸ்டாலின்

தோனி, மு.க.ஸ்டாலின்

சென்னையின் செல்லப்பிள்ளை தோனி. தமிழகத்தில் உள்ள அனைவரும்போல நானும் ஒரு தோனி ரசிகன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சரான பிறகு விளையாட்டுத்துறை எழுச்சி பெற்றுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மற்றும் முதலமைச்சர் கோப்பைக்கான இலட்சினை, சின்னத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பங்கேற்றனர். முதலமைச்சர் கோப்பைக்கான சிறப்புப் பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இலட்சினைக்கு வீரன் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தோனி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் விளம்பரத் தூதராக தோனி உள்ளார். தமிழ்நாடு விளையாட்டுத்துறைக்கு நிதி குறைவாக ஒதுக்கப்படுவதால் துறையை தன்னிறைவு பெரும் நோக்கில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தநிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘சென்னையின் செல்லப்பிள்ளை தோனி. தமிழகத்தில் உள்ள அனைவரும்போல நானும் ஒரு தோனி ரசிகன். தோனி பேட்டிங்கை பார்க்க சேப்பாக்கம் மைதானம் சென்றேன். தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என விரும்புகிறேன். தோனி சொந்த உழைப்பால் வளர்ந்தவர். அதனால்தான் இன்று அவர் விளம்பரத் தூதராக உள்ளார்.

தமிழகத்தில் பல தோனிகளை உருவாக்க வேண்டும். கிரிக்கெட்டில் மட்டும் இல்லாமல் அனைத்து விளையாட்டுகளிலும் உருவாக்க வேண்டும். உதயநிதி அமைச்சரான பிறகு மாபெரும் எழுச்சியை விளையாட்டுத்துறை பெற்றுள்ளது. நாள்தோறும் ஏதேனும் ஒரு பணி விளையாட்டு துறையில் நடைபெற்று வருகிறது. அவருக்கும் அவர் துறையை சார்ந்து இருப்பவர்களுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு 44-வது ஒலிம்பியாட் போட்டியை அனைவரும் பாராட்டும் வகையில் மிகச் சிறப்பாக நடத்தி இருக்கிறது. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டை விளையாட்டில் முன்னோடி மாநிலமாக மாற்ற பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் உயரிய ஊக்கத்தொகையும் விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

ஒன்றாக செயல்பட்டு அ.தி.மு.கவை மீட்டெடுப்போம்... டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ் கூட்டாக அறிவிப்பு

top videos

    தமிழ்நாட்டு விளையாட்டுப் போட்டிகள் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டு விளையாட்டுத்துறை மானிய கோரிக்கையில் மகத்தான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு தனிப்பட்ட முறையில் ரூபாய் 5 லட்சம் நன்கொடையாக வழங்குகிறேன்’ என்று தெரிவித்தார்.

    First published:

    Tags: MK Stalin, MS Dhoni