ஏர் கன்டிஷனர் ஆலையை அமைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசுடன் ஜப்பானைச் சேர்ந்த மிட்சுபிஷி எலெக்ட்ரிக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி, ஜப்பானைச் சேர்ந்த மிட்சுபிஷி எலெக்ட்ரிக் நிறுவனம், தமிழ்நாட்டில் புதிதாக ஏர் கன்டிஷனர் மற்றும் கம்ப்ரசர் ஆலையை அமைக்க உள்ளது. இதையொட்டி, சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
முதலமைச்சர் முன்னிலையில் நடைபெறும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக 2000க்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் பெருவயல் கிராமத்தில் 52 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது.
2025 அக்டோபருக்குள் உற்பத்தி தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 3 லட்சம் ஏர் கண்டிஷனர் மற்றும் டிசம்பர் 2025 இன் தொடக்கத்தில் 6,50,000 கம்ப்ரஸர்கள் வரை தயாரிக்க திட்டப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தியாகும் ஏர் கண்டிஷனர் கம்ப்ரஸர்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜனவரி 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க வரும் 23 ம் தேதி ஜப்பான்,சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளேன். இந்திய அளவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது” என பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.