முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “மன்னிப்பு கேட்க வேண்டும்... இல்லைனா ரூ.50 கோடி...” அண்ணாமலைக்கு 48 மணி நேரம் கெடு விதித்த உதயநிதி ஸ்டாலின்..!

“மன்னிப்பு கேட்க வேண்டும்... இல்லைனா ரூ.50 கோடி...” அண்ணாமலைக்கு 48 மணி நேரம் கெடு விதித்த உதயநிதி ஸ்டாலின்..!

அண்ணாமலை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அண்ணாமலை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் கெடு விதித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

DMK Files என்ற பெயரில் திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்து பட்டியலை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட்டார். இதனை மறுத்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கட்சியின் மீது ஆதாரமற்ற வகையில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன், ரூ. 500 கோடி இழப்பீடு கேட்டு சட்ட அறிக்கையை அண்ணாமலைக்கு அனுப்பினார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி,   “திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அதெப்படி சும்மா விடுவோம்” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதையும் படிக்க : “விஜய் அரசியலுக்கு வந்து எங்களை ஆதரிக்க வேண்டும்...“ - சீமான் வைத்த கோரிக்கை..!

இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறான, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி  நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டிஸில், உதயநிதி மீது அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகவும், 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையென்றால் ரூ.50 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்படும் என தெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Annamalai, DMK, Udhayanidhi Stalin