முகப்பு /செய்தி /தமிழ்நாடு / என்எல்சி விவகாரத்துக்கு தீர்வு காண உயர்மட்ட குழு அமைப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு

என்எல்சி விவகாரத்துக்கு தீர்வு காண உயர்மட்ட குழு அமைப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு

Minister Thangam Thennarasu | நிலம் கொடுத்தவர்களுக்கு என்எல்சி வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதை அரசு உறுதி செய்துள்ளதாகவும், அதற்காக உயர்மட்ட குழு அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டுக்கு தேவையான மின் உற்பத்தியை பெறுவதற்காகவே என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

நெய்வேலியில் என்எல்சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்துவது மற்றும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து, சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது அதிமுக, பா.ம.க., காங்கிரஸ், விசிக, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். அவற்றுக்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, என்எல்சி மூலம் தமிழ்நாட்டுக்கான பெரும்பான்மை மின் தேவை பூர்த்தி செய்யப்படுவதாக கூறினார்.

மேலும், மின் தேவைக்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிக்கும் சூழல் உள்ளதாகவும் குறிப்பிட்டார். எனவே, இதை கருத்தில் கொண்டு தான் நிலங்கள் கையகப்படுத்துவதாக விளக்கம் அளித்தார். நிலம் கொடுத்தவர்களுக்கு என்எல்சி வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதை அரசு உறுதி செய்துள்ளதாகவும், அதற்காக உயர்மட்ட குழு அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ப்ளஸ் டூ தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் - சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, நில உடமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கும், மாற்று ஏற்பாடுக்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும், மின் உற்பத்தி, மின் தேவைகளை கருத்தில் கொண்டு அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

top videos
    First published:

    Tags: NLC, Thangam Thennarasu