தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை குறைப்பதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடைப்பெற்று வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் மின் தேவையும் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து துறை ரீதியாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "டாஸ்மாக்கில் கூடுதலாக பணம் பெற்றுக் கொண்டு மது விற்பனை செய்வதாக கூறப்படும் புகார் குறித்து எந்தக் கடை என்று குறிப்பிட்டு புகார் கூறினால் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின்போதும், குட்கா புகாரின் போதும், கொடைநாடு கொலை வழக்கின் போதும் ராஜினாமா செய்யாத எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தற்போது அரசியலுக்காக பதவி விலக சொல்கிறார் என கேள்வி எழுப்பிய செந்தில் பாலாஜி, தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கையை குறைப்பதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடைப்பெற்று வருவதாக தெரிவித்தார். கோயில், கல்வி வளாகங்கள் அருகே இருந்த சுமார் 96 டாஸ்மாக் கடைகள் அறிவிக்கப்படாமலே மூடப்பட்டுள்ளன.
டாஸ்மாக்கில் கூடுதலாக பணம் பெற்றுக் கொண்டு மது விற்பனை செய்வதாக கூறப்படும் புகார் குறித்து எந்தக் கடை என்று குறிப்பிட்டு புகார் கூறினால் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 1977 பேர் மீது நடவடிக்கை எடுத்து 5.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கப்படும் நபர்களை பாதுகாக்க ஒரு சில தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்துகின்றனர். புகார் பெறப்படும் டாஸ்மாக் மதுபான கடைகளில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.535 கோடி பணத்துடன் நடுவழியில் நின்ற லாரி... தாம்பரம் அருகே பரபரப்பு
விஷச் சாராயம் அருந்தி 22 பேர் பலியானது விரும்பத்தாக சம்பவம். அந்தச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2020 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் 20க்கும் மேற்பட்டோர் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர். வரும் காலங்களில் இதுபோன்றதொரு சூழல் நடக்காமல் இருப்பதில் அரசு கவனமாக உள்ளது. விஷச் சாராய விற்பனையில் தொடர்புடையவர்கள் மீது அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் வந்த வழக்கின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சமரசம் தெரிவிக்கப்பட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்கும் போதும், வழக்குப்பதிவு செய்யும் போதும் எனது பெயர் இல்லை. அரசியல் சூழலுக்காக அதன்பின்னர் எனது பெயர் சேர்க்கப்பட்டது. வழக்கு விரைவாக முடிவுக்கு வருவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Senthil Balaji