முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எத்தனை நாள் சோதனை நடத்தினாலும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் - அமைச்சர் செந்தில் பாலாஜி

எத்தனை நாள் சோதனை நடத்தினாலும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் - அமைச்சர் செந்தில் பாலாஜி

எத்தனை நாள் சோதனை நடத்தினாலும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் - அமைச்சர் செந்தில் பாலாஜி

எத்தனை நாள் சோதனை நடத்தினாலும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரரின் வீடுகள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களுக்குச் சொந்தமான இடங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

' isDesktop="true" id="993943" youtubeid="avvAyl2DdFY" category="tamil-nadu">

வருமானவரி சோதனையை ஏற்கனவே எதிர்கொண்டு உள்ளதாகவும், எத்தனை நாள் சோதனை நடத்தினாலும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

மேலும் தனது இல்லத்தில் சோதனை நடைபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். வருமானவரிச் சோதனை என்பது தங்களுக்குப் புதிது இல்லை என்று கூறியுள்ள அவர், சோதனை என்ற பெயரில் வீட்டில் சுவர் ஏறிக் குதித்து உள்ளே நுழைந்தது போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெற்றதாகவும் அமைச்சர் கவலைத் தெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: IT Raid, Senthil Balaji