வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கான பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. இதனை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கடந்த 22ஆம் தேதி ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கபட உள்ளதால் ஆம்னி பேருந்து நிறுத்தம் அமைக்க வெளிவட்ட சாலை முடிச்சூரில் 5 ஏக்கர் நிலபரப்பில் 29 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. அதனை ஆய்வு செய்தேன். மேம்பாலம் கீழ் பூங்கா அமைத்தல், பள்ளி சீரமைப்பு, பேருந்து நிலையம் சீரமைப்பு உள்ளிட்டவை உட்பட 28 இடங்களில் ஆய்வு செய்துள்ளோம்.
இந்தப் பேருந்து நிலையம் மக்களுடைய அடிப்படைத் தேவைகள் எதையும் கணக்கிடாமல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஜூன் மாத இறுதிக்குள் திறந்துவைத்துவிட வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தாலும், பேருந்து முனையம் மக்களின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்திடும் வகையில் அமைந்திட வேண்டும். ஆகவே ஜூலை இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிவடையும்” என்றார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கும் ஆம்னி பேருந்து நிறுத்ததிற்கு சம்மந்தமில்லை, அதனால் வெகு விரைவில் பேருந்து நிலையம் திறக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Minister Sekar Babu