முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ரஜினி குறித்து தொடர் விமர்சனம்- செய்தியாளர் கேள்விக்கு ரோஜா கொடுத்த ரியாக்ஷன்

ரஜினி குறித்து தொடர் விமர்சனம்- செய்தியாளர் கேள்விக்கு ரோஜா கொடுத்த ரியாக்ஷன்

ரஜினிகாந்த் - ரோஜா

ரஜினிகாந்த் - ரோஜா

Tiruchendur roja | இந்தியாவின் சிறந்த முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி உள்ளார் என்று அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tiruchendur (Thiruchendur), India

திருச்செந்தூர் முருகனை தரிசித்த ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா, ரஜினி குறித்த செய்தியாளர் கேள்விக்கு குலவை போட்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து முருகனை வழிபட்டு செல்வது வழக்கம். இதில் திரையுலக பிரபலங்களும் அரசியல் கட்சியைச் சார்ந்த அரசியல் பிரமுகர்கள் பலரும் வந்து  முருகனை வழிபட்டு செல்வர்.

இந்நிலையில் திரைப்பட நடிகரும் ஆந்திர மாநில  சுற்றுலா இளைஞர் மற்றும் மேம்பாடு துறை அமைச்சர் ஆர்கே ரோஜா தனது குடும்பத்துடன் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்து முருகனை வழிபட்டார். அதற்கு முன்னதாக அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கபட்டது. பின்னர் மூலவரான முருகனை வழிபட்டார். தொடர்ந்து கோவில் உள்பிராகரத்தில் உள்ள சண்முகர், பெருமாள் தட்சணாமூர்த்தி சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பிரதோஷம் அன்று வந்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் பல வருடங்களுக்கு பிறகு இன்று குடும்பத்துடன் வருகை தந்து முருகப்பெருமானை வழிபட்டது சந்தோசத்தை அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் முழுவதும் மிக சிறப்பாக சென்று கொண்டிருப்பதாகவும், இந்தியாவின் சிறந்த முதல்வராக ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். சிறந்த முதல்வராக விளங்குவதால் தான் ஆந்திராவில் எந்த தேர்தல் நடைபெற்றாலும் மக்கள் ஜெகன் மோகன் ரெட்டி க்கு வாக்களித்து வெற்றி பெற செய்து வருவதாகவும் கூறினார்.

வரக்கூடிய 2024 வருடத் தேர்தலிலும் 175 தொகுதிகளிலும் வெற்றி பெற்று நாங்கள் தான் வெற்றியடைவோம் என்று கூறிய அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விமர்சிப்பது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு கொலவை சத்தமிட்டு சென்றார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

top videos

    செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி.

    First published:

    Tags: Actress Roja, Rajini Kanth