முகப்பு /செய்தி /தமிழ்நாடு / போக்சோ வழக்கில் யாரும் தப்ப முடியாது... ஜவாஹிருல்லா கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில்

போக்சோ வழக்கில் யாரும் தப்ப முடியாது... ஜவாஹிருல்லா கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில்

போக்சோ  சட்டம்

போக்சோ சட்டம்

போக்சோ வழக்கில் 50 சதவீத வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

போக்சோ குற்ற வழக்கில் எந்த குற்றவாளியும் தப்பிக்க இயலாது என்ற அடிப்படையில் மிகுந்த அக்கறையுடன் விசாரணை நடைபெற்று வருவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ‘பாலியல் குற்ற வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசு முன் வருமா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ‘தமிழ்நாடு முழுவதும் 32 மகளிர் நீதிமன்றங்கள் மாவட்ட நீதிபதிகள் தலைமையிலும் 33 கூடுதல் மகளிர் நீதிமன்றங்கள் குற்றவியல் நடுவர் தரத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், நீதிபதி காலிப்பணியிடங்கள் இருந்தால் விரைந்து நிரப்பப்படும் எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார் .

தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருலலா, ‘குழந்தைகளுக்கு எதிரான போக்சோ சட்டம் குறித்த விசாரணை நடத்த கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என கூறினார்.

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மட்டுமே போக்சோ நீதிமன்றங்கள் இருப்பதாகவும் 14 சதவீத வழக்குகளுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். வழக்கு விசாரணை கால தாமதமாகும் போது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்து விடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிலக்கரி சுரங்க அறிவிப்பு- சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ், பாமக எம்.எல்.ஏக்கள் காரசார விவாதம்

top videos

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, ‘100 க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் உள்ள மாவட்டங்களில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 100 வழக்குகளுக்கு கீழ் உள்ள மாவட்டங்களில் நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார். குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்ற வழக்குகள் 50 சதவீத வழக்குகள் விசாரணை நடைபெற்று தீர்பளிக்கப்படுள்ளதாகவும், 2021ம் ஆண்டில் 1,820 வழக்குகள் விசாரணை நடத்தப்பட்டு 753 வழக்குகளுக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டதாகவும், 2022 ஆம் ஆண்டில் 1,860 வழக்குகள் விசாரிக்கப்படு 842 வழக்குகளுக்கு தீர்பபு அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், ‘போக்சோ குற்ற வழக்குகளில் யாரும் எளிதில் தப்ப முடியாது எனவும் ரகுபதி தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: POCSO case