முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உருமாறிய கொரோனாவால் பெரிய பாதிப்புகள் ஏற்படுமா? - விளக்கமளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்  

உருமாறிய கொரோனாவால் பெரிய பாதிப்புகள் ஏற்படுமா? - விளக்கமளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்  

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா தடுப்பூசி வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி விட்டதால், தற்போது கையிருப்பு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா பாதிப்பு கடந்த ஒருவருடமாகத்தான் குறைந்து இருந்தது. தற்போது கடந்த சில நாள்களாக இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மெல்லமாக அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

மாநிலம் முழுவதும் 836 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில்  3,766 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 35,96,946 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கோவை, மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், வரும் 10 மற்றும் 11 ஆம் தேதியில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை ஒத்திகை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

Read More : வாடகைத்தாய் மூலம் குழந்தை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

top videos

    தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி அதிக அளவில் போடப்பட்டுள்ளதால், நோய் எதிர்பாற்றல் அதிகரித்திருக்கும் எனவே, உருமாறிய கொரோனாவினால் உயிரிழப்பு போன்ற பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி வழங்குவதை மத்திய அரசு நிறுத்திவிட்டதால், தற்போது கையிருப்பு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: CoronaVirus, Ma subramanian, Tamil Nadu