சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் உடல் நலம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விசாரித்தார்
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவேரா திடீரென உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 66,000-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
இந்நிலையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார். நெஞ்சு வலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இவருக்கு இதயவியல் நிபுணர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர் எனவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் நன்கு குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் ஈவிகேஎஸ் இளங்கோவனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அதை தொடர்ந்து, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஓரிரு நாட்களுக்குள் வீடு திரும்புவார் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் இதய மருத்துவர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, EVKS Elangovan