முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திமுக ஆட்சியிலே காவிரி - குண்டாறு திட்டம் நிறைவேற்றப்படும் : அமைச்சர் துரைமுருகன் உறுதி

திமுக ஆட்சியிலே காவிரி - குண்டாறு திட்டம் நிறைவேற்றப்படும் : அமைச்சர் துரைமுருகன் உறுதி

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

Cauvery Gundar Link | கடந்த அதிமுக ஆட்சியில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு உரிய நிலம் கையகப்படுத்தவில்லை என துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் இந்த ஆட்சியிலேயே நிறைவடையும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் தொடர்பாக, சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பின்னர், பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்எல்ஏவுமான விஜயபாஸ்கர், இத்திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏழு மாவட்டங்களின் நூற்றாண்டு கனவுத் திட்டம் என்று கூறினார்.

கடந்த 2021 பிப்ரவரி மாதம் அதிமுக ஆட்சியில் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட குன்னத்தூரில் அடிக்கல் நாட்டப்பட்டதாகவும், முதல் கட்டமாக 6,941 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இந்தப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

எனவே, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் கொண்டு வந்தார் எனவும். இதற்காக 2008-ம் ஆண்டு 254 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

top videos

    தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், கடந்த அதிமுக ஆட்சியில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு உரிய நிலம் கையகப்படுத்தவில்லை எனவும், கால்வாய் வெட்டுவதற்காக எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். ஆனால், திமுக ஆட்சியில் இத்திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    First published:

    Tags: Cauvery River, Duraimurugan