முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சிறார் இலக்கியத் திருவிழாவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வெளிநாட்டு பயணம்- அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

சிறார் இலக்கியத் திருவிழாவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வெளிநாட்டு பயணம்- அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

அமைச்சர் அன்பில் மகேஷ்

அமைச்சர் அன்பில் மகேஷ்

சிறார் இலக்கியத் திருவிழாவில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

சிறார் இலக்கியத் திருவிழாவில் வெற்றி பெறும் குழந்தைகளை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவுள்ளோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு நிறைய திறமை, படைப்பாற்றல் இருந்தாலும் அதை வெளிக்கொண்டு வருவதில் யாரும் முன்னிற்பதில்லை - அன்பில் மகேஷ்

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் சிறார் இலக்கியத் திருவிழா 2023 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுக்க அரசுப்பள்ளிகளில் படிக்கும் 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த சிறார் இலக்கியத் திருவிழா தொடக்கவிழா நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ‘குழந்தைகளுக்கு நிறைய திறமை, படைப்பாற்றல் இருந்தாலும் அதை வெளிக்கொண்டு வருவதில் யாரும் முன்னிற்பதில்லை. குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசைப்பட்டார். அதன்படியே இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது என்றார்.

வகுப்பறையில் கிடைக்கும் மதிப்பெண் மட்டுமே நம்மை மதிப்பீடு செய்யாது. பள்ளிக் குழந்தைகளை ஊக்கப்படுத்துவது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கடமையாக கருதுகிறேன். சிறார் இலக்கியத் திருவிழாவில் வெற்றி பெறும் குழந்தைகளை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவுள்ளோம் என தெரிவித்தார்.

top videos

    இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    First published:

    Tags: Anbil Mahesh Poyyamozhi