முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

School leave | அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கபடுமா என பொதுமக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் பேட்டியளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுத் தேர்வில் மாணவர்கள் ஏன் அதிக அளவில் வரவில்லை என்பது குறித்து இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களோடு ஆலோசிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பப்ளிக் போலீஸ் என்னும் அமைப்பு சார்பில் சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்சி சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளுக்கு காய்ச்சல் காரணமாக விடுமுறை அளிப்பது குறித்து சுகாதார துறையின் வழிகாட்டுதல் படியே பள்ளிக் கல்வித் துறை செயல்படும் என்றும், 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்கள் அதிக அளவில் வரவில்லை என்றும், 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு ஆகிய இரண்டு வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு வைக்கப்படுவதால் மாணவர்கள் அதிக அளவில் தேர்வுக்கு வரவில்லையா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Anbil Mahesh Poyyamozhi, Minister Anbil Mahesh, School Leave, Tamil Nadu, Tn schools