முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆவினுக்கு பால் வழங்கப்போவதில்லை: திட்டமிட்டப்படி போராட்டம் தொடரும் என பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு

ஆவினுக்கு பால் வழங்கப்போவதில்லை: திட்டமிட்டப்படி போராட்டம் தொடரும் என பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு

Milk Producers Association Protest | பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 50ஆயிரம் முதல் ஒரு லட்சம் லிட்டர் வரை பால் விநியோகம் பாதிக்கம் அபாயம்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பால் வளத்துறை அமைச்சருடன் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில்,  திட்டமிட்டப்படி வெள்ளிக்கிழமை முதல் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படும் ஒரு லிட்டர் பாலுக்கு 7 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியது. பால் கொள்முதல் விலை உயர்த்தாத பட்சத்தில் வெள்ளிக்கிழமை முதல் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பால் கொள்முதல் விலை நிலவரம் குறித்து நியூஸ் 18 தொலைகாட்சியின் வணக்கம் தமிழ்நாடு நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்திருந்தார்.

இதையும் படிங்க: வேகமாக பரவும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல்.. திருச்சி சித்த மருத்துவரின் அறிவுரை..

இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டலினுடன் அமைச்சர் நாசர் ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் நாசர் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் நாசர் உறுதியளித்ததாக தெரிகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் திட்டமிட்டப்படி வெள்ளிக்கிழமை முதல் பால் நிறுத்த போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

First published:

Tags: Aavin, Milk Production