தமிழ்நாட்டில் 3 தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதால், 450 மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் வரும் கல்வியாண்டில் மருத்துவ படிப்புக்கு மொத்தம் 1,07,658 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 20 அரசு கல்லூரிகள் உட்பட புதிதாக 50 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் மருத்துவ படிப்பிற்கு கூடுதலாக 8,195 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்வி நிறுவனம், ஈரோடு வாய்க்கால்மேட்டில் உள்ள நந்தா மருத்துவக் கல்லூரி, சென்னை பி.எஸ்.பி. மருத்துவ ஆராய்ச்சி கல்வி நிறுவனம் ஆகியவற்றில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம், ஒரு கல்லூரிக்கு 150 இடங்கள் வீதம், 450 மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் மருத்துவ மாணவர் எண்ணைக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Medical Admission, Medical colleges, Medical Students, Tamil Nadu