Dr Sharmika Siddha medicine: சமூக வலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வந்த டாக்டர் ஷர்மிகாவின் மருத்துவக் குறிப்புகளால் பாதிப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
உணவு, உடற்பயிற்சி, கர்ப்பம் குறித்து வித்தியாசமான கருத்துக்களை தெரிவித்து வந்த டாக்டர் ஷர்மிகாவின் மருத்துவ குறிப்புகளை பின்பற்றி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக 2 பேர் இந்திய மருத்துவ கவுன்சிலில் புகார் அளித்து உள்ளனர்.
பனை நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரியதாகும் என்று சொல்லி சர்ச்சையை கிளப்பியவர் சித்த மருத்துவர் ஷர்மிகா. பெண்கள் குப்புற கவிழ்ந்து படுத்தால் மார்பக புற்றுநோய் வரும். கடவுள் மனசு வைத்தால்தான் குழந்தை பிறக்கும் என்றெல்லாம் பேட்டிகளை தந்து, நெட்டிசன்களின் மீம்ஸ் கண்டெண்ட் ஆனார் டாக்டர் ஷர்மிகா.
"மனிதர்களை விட பெரிய விலங்குகளான மாடு போன்றவற்றை சாப்பிட்டால் செரிமானம் ஆகாது. அதனால் உடல் பாதிக்கப்படும் என்று சொல்லி மதரீதியான சர்ச்சையை கிளப்பினார். பாஜக டெய்சியின் மகள் என்பதால், கூடுதல் எதிர்ப்புகளையும் ஷர்மிகா சந்திக்க வேண்டியதாயிற்று.
குலோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை அதிகரிக்கும் என்றும் சொல்லி, பலரது விமர்சனத்துக்கும் ஆளானார். குறுகிய காலத்தில், எந்த அளவுக்கு யூடியூப், இன்ஸ்டாகிராம், முகநூல் என சமூக வலைதளங்களில் பிரபலமானாரோ, அதே அளவுக்கு கடுமையான விமர்சனங்களையும் இவர் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.
நாளுக்கு நாள் சோஷியல் மீடியாவில் இவரை ட்ரோல் செய்வது அதிகமானதால், "என்னை ட்ரோல் செய்தால் சும்மா விடமாட்டேன்" என்று டாக்டர் ஷர்மிகா பேசிய வீடியோவும், வைரலானது.
சோஷியல் மீடியாவில் எதிர்ப்புகள் வந்தாலும், டாக்டர்களே தன்னுடைய பேச்சுக்கு எதிர்ப்புகளை தெரிவிப்பார்கள் என்று ஷர்மிகா நினைக்கவில்லை. இதையடுத்து, ஷர்மிகா ஒரு வீடியோ வெளியிட்டு, தனது சர்ச்சை பேச்சுக்களுக்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
ஷர்மிகா மீதான புகார்கள் குவிந்த நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு நேரில் ஆஜராகி டாக்டர் ஷர்மிகா விளக்கம் அளித்ததோடு எழுத்துப்பூர்வ விளக்கமும் அளித்தார்.
கட்டாயம் வாசிக்க: முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார்... ஆளுநர் இரங்கல்!
இந்த நிலையில் ஷர்மிகாவின் விளக்கம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில் டாக்டர் ஷர்மிகாவிற்கு மற்றொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சித்த மருத்துவர் ஷர்மிகாவின் மருத்துவ குறிப்பு வீடியோக்களை பார்த்து, அதன்படி பின்பற்றியதால் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதாக 2 பேர் இந்திய மருத்துவ கவுன்சிலில் தனித்தனியாக புகார்கள் கொடுத்துள்ளனர்.
இந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்த இந்திய மருத்துவ கவுன்சில், அவர்களை நேரில் அழைத்து எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என பரிசோதனை செய்ய உள்ளன. மருத்துவ குறிப்புகள் வீடியோ போட்டதால் பிரச்சினையில் சிக்கிய டாக்டர் ஷர்மிகா, தற்போது பொழுதுபோக்கு வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
மருத்துவ குறிப்புகளில் எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்தாரோ, அதை விட அதிகமானோர் டாக்டர் ஷர்மிகாவின் வீடியோக்களை லைக் செய்து வருகின்றனர். இந்திய மருத்துவ கவுன்சில் நடவடிக்கையில் இருந்து டாக்டர் ஷர்மிகா தப்புவாரா சிக்குவாரா என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Nadu