முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த 3 பேர்

கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த 3 பேர்

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

  • Last Updated :
  • Tamil Nadu, India

கள்ளச்சாராய விவகாரத்தில் மரக்காணம் காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மரக்காணம் காவல்நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர் தீபன், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் மரியா சோபி மஞ்சுளா, உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், கள்ளச் சாராய விற்பனையில் தொடர்பு உடையவர்களை தேடும் பணி விரைவுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளார்.

இதையும் படிங்க: Exclusive : "அமித் ஷா சொல்லியும் அமமுகவை கூட்டணியில் சேர்க்க மறுத்துவிட்டார் ஈபிஎஸ்.." - டிடிவி தினகரன்

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாயும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

First published:

Tags: CM MK Stalin, Villupuram