Kalaignar Centenary Library: மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" என பெயர் வைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, 2023ம் மார்ச் மாதம், தமிழ்நாடு சட்டமன்ற உரையாற்றிய நிதி துறை அமைச்சர்," மதுரையில் சர்வதேச தரத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்வாக, கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்படும் என்றும், தமிழ்ச் சமுதாயத்திற்கு கலைஞர் ஆற்றிய பணிகளைப் போற்றும் வகையில் அமையவுள்ள இந்த நூலகம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாசகர்கள் வரவேற்கும் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில், இந்த நூலகத்திற்கு அதிகாரப்பூர்வமாக, "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" என பெயர் வைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு நூலகம்: மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகமானது அடித்தளம் மற்றும் தரைத்தளம் முதல் ஆறு தளங்களுடன் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், அறிவியல், மருத்துவம், கணிணி அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு உட்பட அனைத்து பாடங்களிலும் புகழ்பெற்ற நூல்கள் அமையப்பெறும்.
இதையும் வாசிக்க: தொழில்முனைவோருக்கான திட்டங்களை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும் - ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுரை
மேலும், இந்நூலகமானது வாசகர்களுக்கு நூல்களை இரவல் வழங்கும் நூலகமாகவும், குறிப்புதவி நூலகமாகவும் செயல்படும். மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் நூல்கள், நூலகச் சேவைகள் மற்றும் வசதிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.