சூதாட்டத்தால் ஏற்படும் மரணங்கள், குடும்பங்கள் வறுமையில் வாடுவது ஆகியவற்றை தடுக்க ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான சட்டத்தை தமிழக அரசு இயற்றியதில் என்ன தவறு என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
முன்னதாக, தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பாரத சக்கரவர்த்தி ஆகியவர் கொண்ட அமர்வு முன்னிலையில் இன்று மனு மீதான வாதங்கள் நடைபெற்றன.
ஆன்லைன் ரம்மி நிறுவனம் ஒன்றின் சார்பாக ஆஜாரானஅபிஷேக் மனு சிங்வி, " ஆன்லைன் தடை சட்ட மசோதா அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று வாதிட்டார். திறமையை அடிப்படை அம்சமாக கொண்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்றும், சமூகச் சீரழிவை ஏற்படுத்தும் மதுபான விற்பனைகள் மீது எந்த தடையும் விதிக்க வில்லை என்றும் வாதிட்டார்.
அப்போது, பேசிய பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, " மதுரைக்கு அருகே உள்ள தனது தென்னூர் கிராமத்தில் சிகரெட், மது மீதான விறபனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை நினைவூட்டினார். மதுரை காந்தி அருங்காட்சியகம் தனது கிராமத்தை மாதிரி கிராமமாக தேர்வு செய்துள்ளதையும் தெரிவித்தார்.
மீண்டும் தனது வாதத்தைத் தொடந்து சிங்வி, " திறன் சார்ந்த ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் சமூக சீரழிவுகள் குறித்த விரிவான அறிக்கையை , தரவுகளோ அரசிடம் இல்லை என்று தெரிவித்த அவர், ஆன்லைன் ரம்மி தொழில்நுட்பம் உண்மைக்கு புறம்பானமை என்று நிரூபிக்க எந்தவித கூறுகளும் இல்லை என்றும் வாதிட்டார்.
தமிழ்நாட்டில் குதிரை பந்தயம் கூட திறன் சார்ந்த விளையாட்டுக்காக பார்க்கப்படுவதாக தெரிவித்த அவர், ஒழுங்குமுறைகள் மூலம் எளிதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை நெறிமுறைப்படுத்த முடியும், முறைகேடான செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார், மேலும், நேரடி ஆன்லைன் விளையாட்டை விட ஆன்லைன் விளையாட்டுக்கு மட்டும் சமூகச் சீரழிவு பிம்பம் உருவாக்கப்பட்டுளளதாகவும் தெரிவித்தார் .
இதற்கு, பதிலளித்த நீதிபதிகள், "திறன் சார்ந்த விளையாட்டுகள் என்று கருதப்பட்ட குதிரை பந்தயமும், லாட்டரி குழுக்கலும் படிப்பபடியாக தடை செய்யப்பட்டதையும் சுட்டிக் காட்டினர். சூதாட்டத்தால் ஏற்படும் மரணங்கள், குடும்பங்கள் வறுமையில் வாடுவது ஆகியவற்றை தடுக்க ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான சட்டத்தை தமிழக அரசு இயற்றியதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினர். ஒழுங்குமுறைகள் மூலம் நெறிப்படுத்த முடியும் என்பதை அரசு ஏற்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
பின்பு, All India Gaming Federation அகில இந்திய விளையாட்டு கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிமா சுந்தரம், திறன் சார்ந்த விளையாட்டுகளை மத்திய அரசால் ஒழுங்குமுறை படுத்த முடியும் என்றும், மாநில அரசுகளுக்கு சட்டமியற்றும் அதிகாரம் இல்லை என்றும் வாதிட்டார். மேலும், ஆன்லைன் தடை சட்டத்தின் மீது இடைக்கால தடை விதிக்க வேண்டும்என்றும் வாதிட்டார்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான கபில் சிபல், " அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி, பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாடுதல் தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்று தெரிவித்தார். ஆன்லைன் சூதாட்டம் தளங்கள் பணம் சம்பாதித்து குடும்பங்களை சீரழிப்பதால் அந்த குடும்பங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றும், மனுதாரர்களுக்கு எந்த பாதுகாப்பும் வழங்க கூடாது என்றும் வாதிட்டார்.
இதையும் வாசிக்க: தமிழ்நாட்டில் 11 புதிய நர்சிங் கல்லூரிகள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அனைத்து வாதங்கையும் கேட்டறிந்த நீதிபதிகள், " எதிர்வரும் ஜூன் 2வது வாரத்துக்குள் தமிழ்நாடு அரசு பதில் மனு அளிக்க உத்தரவிட்டனர். தமிழ்நாடு அரசின் பதில் மனுவை பெறாமல் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai High court