முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆர்.எஸ்.எஸ் பேரணி விவகாரம்... தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கூடுதல் அவகாசம்!

ஆர்.எஸ்.எஸ் பேரணி விவகாரம்... தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கூடுதல் அவகாசம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்தச் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கட்டுப்பாடுகளை விதித்த உத்தரவு விடுத்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை இருநீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரவியதால், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் தொடர்பான வழக்கில் கலந்தாலோசிக்க முடியவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Also Read : ஓ.பி.எஸ் தாயார் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மேலும், எந்தெந்த இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க முடியும் என்பது தொடர்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசமும் கோரப்பட்டது. அரசுத் தரப்பின் வாதத்தை ஏற்ற நீதிபதி ராமசுப்ரமணியன், தமிழ்நாடு அரசுக்கு அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

First published:

Tags: Madras High court, RSS, Tamil Nadu government