முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்... தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு..!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்... தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு..!

இபிஎஸ் - ஓ.பி.எஸ்

இபிஎஸ் - ஓ.பி.எஸ்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி தலைமை அனுமதி அளித்துள்ளார். இதனையடுத்து, வழக்கு நாளை காலை 10 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் தலைமையில் பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

First published:

Tags: ADMK, AIADMK, Edappadi Palaniswami, General Secretary, Madras High court, OPS - EPS