முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மாதவரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் : சட்டப்பேரவையில் சுதர்சனம் எம்.எல்.ஏ கோரிக்கை!

மாதவரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் : சட்டப்பேரவையில் சுதர்சனம் எம்.எல்.ஏ கோரிக்கை!

மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம்

மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம்

Madhavaram MLA Sudharsanam | மாதவரம் பால் பண்ணைக்கு சொந்தமான இடத்தில் மினி டைட்டில் பார்க் அமைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னையை அடுத்த மாதவரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் , மாதவரம், திருவொற்றியூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி மாதவரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், மாதவரம் முதல் திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயில் இணைப்பு ஏற்படுத்த வேண்டும் எனவும் மாதவரம் பால் பண்ணைக்கு சொந்தமான இடத்தில் மினி டைட்டில் பார்க் அமைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

மாதவரம் புதிய பேருந்து நிலையம் ரவுண்டானா முதல் சோழவரம் சுங்கச்சாவடி வரை போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய சுதர்சனம்,  இதனை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார் மேலும் மாதவரம் தொகுதியில் மூலிகை ஆராய்ச்சி மையம் அமைத்திட வேண்டும் எனவும் அரசு கலைக் மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

top videos
    First published: