முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ''திண்டுக்கல் வருகிறேன், தங்கப் பேனா பரிசளிக்கிறேன்'' - நந்தினிக்கு வைரமுத்து வாழ்த்து

''திண்டுக்கல் வருகிறேன், தங்கப் பேனா பரிசளிக்கிறேன்'' - நந்தினிக்கு வைரமுத்து வாழ்த்து

நந்தினி - வைரமுத்து

நந்தினி - வைரமுத்து

பிளஸ் டூ தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கணக்கு பதிவியல் ஆகிய பாடங்களில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறிப்பாக தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற இருவரில் நந்தினியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தச்சுத் தொழிலாளியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவருக்கு அரசியல் கட்சிகள் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை மாணவி நந்தினி குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதையும் படிக்க |  ஹேய் ஹேன்ட்சம்... ஹேப்பி பர்த்டே விஜய் தேவரகொண்டா!

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை மூலம் வாழத்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில்,

''ஒரு

தச்சுத் தொழிலாளியின் மகள்

மாநிலத் தேர்வில்

உச்சம் தொட்டிருப்பது

பெண்குலத்தின் பெருமை

சொல்கிறது

எப்படிப் பாராட்டுவது?

அண்மையில் நான்பெற்ற

தங்கப் பேனாவைத்

தங்கை நந்தினிக்குப்

பரிசளிக்கிறேன்

திண்டுக்கல் வருகிறேன்;

நேரில் தருகிறேன்

உன் கனவு

மெய்ப்படவேண்டும் பெண்ணே!'' என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Vairamuthu